தமிழகத்தில் மக்கள் குடிக்கிறார்கள், அதனால் டாஸ்மாக் வருவாய் அதிகரிக்கிறது என ஆயுத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். 

2020-2021-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தமிழக அரசு தனது டாஸ்மாக் நிறுவனம் மூலம்  ரூ.30,000 கோடி ஈட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க;-  கல்லா கட்டிய எடப்பாடி அரசு... பொங்கல் பண்டிகையின் மது விற்பனை எவ்வளவு தெரியுமா..?

இந்நிலையில், பட்ஜெட் உரை மீதான விவாதம் 2-வது நாளாக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆனால், டாஸ்மாக் மூலம் மட்டும் வரக்கூடிய வருவாய் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது நல்லது அல்ல. அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் மது விலக்கு எப்போது அமல் படுத்தப்படும் என திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆயுத்துறை அமைச்சர் தங்கமணி;- மது குடிப்பது அதிகரிப்பதே டாஸ்மாக் வருவாய் அதிகரிப்புக்கு காரணம். மக்கள் குடிக்கிறார்கள் அதற்கு என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க;- நள்ளிரவில் முனங்கல் சத்தம்.. கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர் எடுத்த விபரீத முடிவு

தேர்தல் அறிக்கையின் படி டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். பூரண மதுவிலக்கே தங்கள் கொள்கை என்றும், தமிழகத்தில் செயல்பட்டு வந்த 6815 கடைகளில் 1000 கடைகள் ஐநூறு ஐநூறாக மூடப்பட்டதாகவும் விளக்கமளித்தார். மேலும், டாஸ்டாக் திறந்திருக்கும் நேரம் 2 மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளது.