tamizhisai press meet about mersal film
மெர்சல் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்ததால், தனக்கு தொலைபேசியில் ஆபாச மிரட்டல் வருவதாகவும், எத்ர்கருத்து தெரிவித்தால் இதுதான் பரிசா என தமிழக பாஜன தலைவர் தமிழைசை கேள்வி எழுப்பியுள்ளார்.
மெர்சல் திரைப்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். அந்த காட்சிகளை நீக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தமிழிசை தெரிவித்தார்.
இதனிடையே மெர்சல் திரைப்படத்துக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் நடிகர் விஜயை பாஜகவிற்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய தமிழிசை , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு கட்டப்பஞ்சாயத்து கட்சி என தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, இப்பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ள விரும்புவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மெர்சல் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்ததால், தனக்கு தொலைபேசியில் ஆபாச மிரட்டல் வருவதாகவும், மிகவும் மோசமாக வார்த்தைகளால் மர்ம நபர்கள் மிரட்டுவதாகவும் எதிர்கருத்து தெரிவித்தால் இதுதான் பரிசா எனவும் தமிழைசை கேள்வி எழுப்பியுள்ளார்.
