‘ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைக் கண்டு நாங்கள் சற்றும் துவளமாட்டோம். வரும் பாராளுமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் நிச்சயம் மோடிதான் பிரதமராவார். ஏனெனில் எதிர்க்கட்சிகளிடம் மோடிக்கு நிகரான தலை இல்லவே இல்லை’ என்கிறார் பா.ஜ.க.வின் தமிழிசை சவுந்திரராஜன்.

சற்றுமுன்னர் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துச் சொல்வதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழிசை,’ இவ்வளவு நாட்களும் எதற்கெடுத்தாலும் வாக்கு எந்திரங்களின் மேல் பழியைப் போட்டுவந்த காங்கிரஸ் தன் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்ளப்போகிறது? பாஜக மோசமான தோல்வியை அடையவில்லை, வெற்றிக்கும், தோல்விக்கும் ஒருசில தொகுதிகளே வித்தியாசம்.

இந்த வெற்றிகள் அத்தனையும் உள்ளூர்ப் பிரச்சினகளுக்காக விழுந்த வாக்குகள். இந்த 5 மாநிலங்களிலுமே எடுக்கப்பட்ட தேர்தல் கணிப்புகளில் முதல்வர் பதவிக்கான வாக்குகள் மட்டுமே மோடிக்கு எதிராக விழுந்துள்ளனவேதவிர மோடியின் பிரதமர் பதவிக்கு எதிரான வாக்குகள் அல்ல. அனைத்து மாநிலங்களிலுமே பிரதமர் பதவிக்கு யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேல்விக்கு அவர்கள் மோடியின் பெயரையே முன்மொழிந்திருக்கிறார்கள். ஏனெனியில் மோடிக்கு நிகரான தலை எதிர்க்கட்சியில் இல்லவே இல்லை. இது வரும் பாராளுமன்றத்தேர்தலில் தெரியவரும்’ என்று சற்றும் அசராமல் பதிலளிக்கிறார் தமிழிசை.