tamilsiai condemns police

கதிராமங்கலம் போராட்டத்தின்போது மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களின் அச்சத்தை போக்குவதை விட்டுவிட்டு அச்சத்தை ஓ.என்.ஜி.சி. மேலும் தூண்டுவதாக குற்றம் சாட்டினார்.

கதிராமங்கலம் போராட்டத்தின்போது மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

ஜி.எஸ்.டி. மூலமாக வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

திரையரங்கு வேலை நிறுத்தம் செய்வது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், திரையுலகில் உள்ள பிரச்சனைக்கு மாநில அரசின் வரி விதிப்புதான் காரணம் என்றார்.

மத்திய அரசு மக்கள் விரோதப் போக்கில் ஈடுபடாது எனவும், தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.