வரும்  13 ஆம் தேதி தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  மூன்றாவது அணி குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால்  சந்திரசேகர ராவின் மகள், ஸ்டாலினை சந்திக்க நாங்கள் ஒரு போதும் அப்பாண்ட்டெண்ட் கேட்கவில்லை என தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை , இல்லாத ஒன்றை ஏற்படுத்தி, பின்னர் அதைப் புறக்கணிப்பது போல நாடகம் ஆடுவது ஸ்டாலினுக்கு கைவந்த கலை என தெரிவித்தார்.

சந்திர சேகரராவ் மற்ற தலைவர்களை  சந்திப்பதால் தன்னையும் சந்திக்க வருவார் என ஸ்டாலின் நினைத்துக் கொண்டு பாவம் ஏமாந்துவிட்டார் என தமிழிசை கூறினார். ஸ்டாலின் பிரதமர் ஆவார் என்று  சொல்லாமல் ஜனாதிபதி ஆவார் என அவரது கட்சிக்காரர்களே அவரை கிண்டல் செய்கிறார்கள் என கலாய்த்தார்.

எப்போது பார்த்தாலும் பிரதமரை குறை சொல்லிக் கொண்டே இருக்கும் ஸ்டாலினின்  பழைய கதைகளை தோண்டி துருவி சொல்ல ஆரம்பித்தால், அவர் வீட்டைவிட்டு கூட வெளியே போக முடியாது என தமிழிசை கடுமையாக பேசினார்..

ஆனால் நாகரீகம் கருதி  அவரைப் பற்றிய உண்மைகளை  நாங்கள் பேசாமல் இருக்கிறோம் என தமிழிசை தெரிவித்தார்.