விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் தானும் பிறந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என  தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் எமெ.என் ராஜா தெரிவித்துள்ளார்.  விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா புலிகளின் ஆதரவு இயக்கங்கள் சார்பில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் எம்.என் ராஜா,  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் பிளவர் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான பள்ளியில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் . அங்குள்ள மாணவர்களுக்கு மத்திய உணவு வழங்கி கொண்டாடிய அவர், பின்னர் செய்தியாளர்க்களை சந்தித்தார், சிறப்பு  பள்ளியில் பிறந்தநாளை கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.  இனி வரும் காலங்களில் எந்த குழந்தையும் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கக்கூடாது  என இறைவனை வேண்டுகிறேன் .  இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரனின் பிறந்த தினம்,  இந்த நாளில் தானும் பிறந்திருப்பது போற்றுதலுக்குரியது என ராஜன் தெரிவித்தார்.  அதாவது விடுதலைப்  புலிகளையும் அதன் தலைவரையும் கடுமையாக விமர்சிக்கும் பாஜக,  புலிகளை ஒரு தீவிரவாத இயக்கம்போல  சித்தரித்து வருகிறது.

 

அத்துடன் நேர்எதிரியான  காங்கிரஸ் கட்சிக்கு இணையாக விடுதலைப்புலிகளை தடை  செய்யப்பட வேண்டும், அது அழித்தொழிக்கப்பட வேண்டிய இயக்கம் என்று மேடை தோறும்  பாஜக வெறுப்பை காட்டி வரும் நிலையில்,  பாஜகவை சேர்ந்த ஒருவர் அதுவும், தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவராக உள்ள ஒருவர்  முதல் முறையாக புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தையும்,  அந்த தினத்தில் தான் பிறந்தது  பெருமை அளிக்கிறது என தெரிவித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.