நாடாளுமன்ற தேர்தல் வேற நெருங்குது.. தமிழகத்தின் நிலைமை எப்படி இருக்கும்னு இப்பவே அரசியல் களம் சூடு பிடித்து உள்ளது..

மத்தியில் ஆளும் பாஜக ஆசியோடு தான் தமிழக அரசு தலை ஆட்டுகிறது என அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். எப்படியாவது எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென எதிர்க்கட்சி மட்டுமல்ல, அமமுக தினகரன் மும்முரமாக உள்ளார். ஆனாலும் என்ன செய்வது  யார்?  யார்? குடுமியோ டெல்லி மேலிடத்தில் சிக்கி உள்ளதால், சீப்பு போட்டு சிக்கல் எடுத்துவிடவே நேரம் போத மாட்டேங்கிறது. 

இப்படிப்பட்ட தருணத்தில் தென்னிந்திய மாநிலத்தில் ஓரளவிற்கு ஆஹா ஓஹோ என்னும் சொல்லும் அளவிற்கு உள்ள ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு, சென்னை வந்து திமுக தலைவரை சந்தித்து விட்டு, ஸ்டாலின் பிரதமராகக்கூட தகுதி உண்டு என்று கூறிவிட்டார். ஆனால் அவருக்கோ நான் முதல்ல முதல்வராகுறேன் பிறகு அதை பற்றி யோசிப்போம் என மைன்ட்வாய்ஸ் சொல்லி இருக்கும்.

சரி எப்படி பார்த்தாலும் தமிழகத்தில் அடுத்த ஆட்சி திமுக தான் என ஒரு பக்கம் டமார் அடிச்சுட்டு பேசி வந்தாலும், வைகோவின் நிலைப்பாடு பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் தலையில் சொரிவதா அல்லது சுவற்றில் இடித்துக் கொள்ளலாமா என யோசிப்பார் போல... தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகின்றனர் என கூறி திமுக விட்டு வெளியே சென்ற வைகோ மதிமுக தொடங்கினார். இப்பொது அங்கு கொஞ்சம் பருப்பு வேகாததால, மீண்டும் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விட கூட ரெடியாகி விட்டார் வைகோ. அப்படியாவது திமுக உடன் கூட்டணி ஓகே சொல்வாரா என்பதற்காக....

.

சரி இவரை விடுங்க.... அடுத்ததாக  கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர்  டி.ராஜா திமுக தலைவரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி விட்டு என்ட்ரி போட்டு விட்டார்... அடுத்ததாக விசிக தலைவர் திருமாவளவனும் என்ட்ரி கொடுத்து  விட்டார்....ஆக ஆதரவு கொடுக்க முன்வரும் வரிசையில்...ஒவ்வொருத்தராக ஸ்டாலின் கரம் பிடிக்க தொடங்கி விட்டனர். 

இது ஒரு பக்கம் இருக்க, எப்போதும் ஆவேசமாக பேசும் வைகோவை செம கலாய் கலாய்த்து விட்டார் மத்திய அமைச்சர் பொன் ராதாக்ருஷ்ணன்...... மோடி தமிழகம் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்ற வைகோவின் சவாலிற்கு பதிலடி கொடுத்து சவால் விடுத்தது உள்ளார் பொன் ராதா.... மோடி தமிழகம் வருவார் ....சுற்றுபயணம் மேற்கொள்வார்.. எதையும் சமாளிக்க  நாங்க ரெடி ...நீங்க ரெடியா என வேற லெவலுக்கு பேசி விட்டார்....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த எப்போது தான் கட்சியின் அறிவிப்பு வெளியிடுவாரோ என ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இப்போது சற்று புரிந்துக் கொள்ள தொடங்கி விட்டனர். 

நடிகர் ரஜினிகாந்த மூலமாக தமிழகத்தில் மோடி அலை வீச தொடங்கி  விட்டது என்பது தான் .... ரஜினி எதையும் எதார்த்தமாக பேசக் கூடியவர்.. ஆனால் இதுவரை மோடி அரசுக்கு எதிராக எந்த ஒரு மாற்று கருத்தும் தெரிவிக்காதவர் ரஜினிகாந்த். அதுமட்டுமில்ல... மோடி தான் பலசாலி என்பதை ஒரே ஒரு கேள்வி மூலம் தமிழகத்தில் பெரும் அலை வீச வைத்து விட்டார்...

அதாங்க...” பது பேர் ஒருத்தர எதிர்த்தால் அந்த ஒருத்தர் பலசாலியா  அல்லது இந்த பத்து பேர் பலசாலியா என ... மோடியை எதிர்க்கும் அந்த பத்து பேருக்கு கேள்வியை முன்வைத்தார்...... சமீபத்தில் பிரதமர் மிக பெரிய திட்டங்களை எல்லாம் நடத்த இரவும் பகலும் செயல்படுகிறார்....அந்த  திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என  பாஜக விற்கு ஆதரவாக பேசினார். 

இதே போன்றே ஸ்டெர்லைட் விவகாரத்திலும், எதற்கெடுத்தாலும்  போராட்டம் என்றால், தமிழ் நாடு சுடுகாடாக தான் ஆகும் என தெரிவித்து  இருந்தார்... இந்த போராட்டம் மத்திய அரசுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, டைலமோவில் தினகரன்....ஆளும் அதிமுக, தேமுதிக  தலைவர் விஜயகாந்த் என இவர்கள் அனைவரும் ஓரணியில் திரள தான் அதிக வாய்ப்பு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆக தமிழகத்தில் மோடி அலை வீச தொடங்கிவிட்டது... பொறுத்திருந்து பார்க்கலாம் நாடாளுமன்ற தேர்தலில்...!