மே 12 ஆம் தேதி கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற தமிழக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அக்கட்சியின்  தேசிய செயலாளர் எச். ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வருகின்றன. உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில் தற்போது மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத காலம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

அதே நேரத்தில் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடைப்பெற உள்ளதால் அங்குள்ள வாக்கு வங்கியை கணக்கில் கொண்டு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் செய்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக ஜெயிக்க வேண்டும் என தமிழக மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

அப்போதுதான் காவிரி மேலாண்டை வாரியம் அமைக்க முடியும் என்றும், இப்பிரச்சனைக்கு ஒர நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.