தமிழக மக்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் ஊழல் தான் மிஞ்சும் என்றும் அந்த இரு ஊழல் கட்சிகளையும். தூக்கி எறிய வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் நேற்று மக்கள் நிதி மய்யம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.மதுரையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கமல் இதனை அறிவித்தார். மேலும் புதிய கட்சிக்கான கொடியை ஏற்றிவைத்த கமலஹாசன், கட்சியின் கொள்கைகளையும் அறிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு கமலஹாசனை வாழ்த்திப் பேசினார். அப்போது கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகா். நான் அவரின்  தீவிர ரசிகன் என்று தெரிவித்தார்.

கமல்ஹாசன் படங்களில் மட்டும் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் அவா் நாயகன் தான். அவா் மிகவும் துணிச்சல் மிக்கவா். கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வரும் கருத்துகள் மிகவும் துணிச்சல் மிக்கவையாக உள்ளன. அவரின துணிச்சலை கண்டு நான் மிகவும் வியந்துள்ளேன் என குறிப்பிட்டார்..

தமிழக மக்கள் தற்போது வரை அதிமுக, திமுக  என இரு கட்சிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு தவித்து வந்தனா். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னா் டெல்லியில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிக்கு இடையே மக்கள் சிக்கி இருந்தனா். அவா்களுக்கு மாற்றாக டெல்லியில் ஆம் ஆத்மி செயல்பட்டு வருகிறது.அதே போன்று தமிழகத்தில் இன்று ஊழலற்ற கட்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் திமுக, அதிமுகவுக்கு  வாக்களித்தால் ஊழல் தான் மிஞ்சம்.  எனவே இந்த இரு ஊழல் கட்சிகளையும் மக்கள் தூக்கி எறிய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சிறந்த பள்ளி, சாலை வசதி, குடிநீா், மின்சாரம் வேண்டுமென்றால் கமல்ஹாசனுக்கு வாக்களியுங்கள் என கூறி கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.