சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இரண்டாயிரம் குடிசைப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற 2500 களப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி  தெரிவித்துள்ளார் .  தமிழக முதலமைச்சர் அவர்கள் சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் பொதுமக்களை எளிதில் அணுகி விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகளை ஈடுபடுத்த  உத்தரவிட்டார் .  அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இரண்டாயிரம் குடிசைப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வ தொண்டு  நிறுவனங்களின் சார்பில் 2500 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என மாநகராட்சி  நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார் .

  

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய்த்தொற்று குறிப்பிட்ட 30 வார்டுகளில் மட்டும் அதிகமாக காணப்படுகிறது , மற்ற பகுதிகளில் குறைந்த அளவிலேயே வைரஸ் தொற்று உள்ளது .  இந்த வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி நுண் அளவில் கண்காணித்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .  அதன் அடிப்படையில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணிகளில் ஈடுபட உள்ளனர்,  கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட சுமார் 100 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து விருப்பம் தெரிவித்திருந்தனர் ,  சென்னையில் 1979  குடிசைவாழ் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன .  இப்பகுதிகளில் சுமார் 25 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர் .  இந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சைகள் வழங்க 135 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன .  இந்த குடிசை வாழ் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , முக கவசம் அணிதல் ,  அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவுதல் ,  கூட்டத்தை தவிர்த்தால் ,  மட்டும் சுய சுத்தம் ஆகியவற்றைக் குறித்து எடுத்துரைக்க இந்த தன்னார்வலர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த குழுவில் ஒரு திட்ட தலைவர் ,  திட்ட பணி மேலாளர் ,  தகவல் மேலாளர் ,  கள மேற்பார்வையாளர் மற்றும் களப்பணியாளர்கள் என பிரிக்கப்பட்டு பணிகள் கண்காணிக்கப்படும் இந்தக் குழுக்களில் மொத்தம் 2500 களப்பணியாளர்கள் 15  களப் பணியாளர்களுக்கு ஒரு  மேற்பார்வையாளர் என மொத்தம் 166 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் .  ஒரு குழுவிற்கு ஒருவர் என 100 குழுவிற்கு 100 திட்டப்பணி மேலாளரும் ,  100 தகவல் மேலாளரும் நியமிக்கப்படவுள்ளனர் ,  ஒவ்வொரு களப்பணியாளரும்  300 வீடுகளை கண்காணிப்பார்கள் . களப்பணியாளர்கள் ஒவ்வொரு பகுதியிலும் அடிப்படை தேவைகளான உணவு , மளிகை பொருட்கள் ,  குடிநீர் ,  பொதுக்கழிப்பிடம் போன்ற காரணங்களுக்காக வெளியே சென்று வருபவர்களை  கண்காணித்து அந்த இடங்களில் கூட்டம் கூடாமல் இடைவெளி கடைப்பிடிப்பதை பொதுமக்களிடையே அறிவுறுத்துவார்கள் .  எந்த ஒரு வீட்டிலும் நபர்களின் வயது பாலினம் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை சேகரித்து எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ,  கர்ப்பிணிப் பெண்கள் ,  உயர் ரத்த அழுத்த நோயாளிகள் , மற்றும் நீரிழிவு நோய் பாதித்த நபர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி புரிதல் போன்ற பணிகளை  மேற்கொள்வார்கள் . 

ஒவ்வொரு  களப்பணியாளரும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வைரஸ் தொற்று பாதித்த வீடுகளை கண்காணித்து சரியான நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என கண்டறிந்து பொதுமக்களுக்கு முக கவசம் ,  கபசுரக் குடிநீர் ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்வார்கள் .  இந்த களப்பணியாளர்கள் வருகின்ற சனிக்கிழமை முதல் களப் பணியில் ஈடுபடுவார்கள் .  மேலும்  களப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு கவனமாக பணியாற்ற வேண்டும் ,  பொதுமக்களை கண்காணித்துக் கொள்ள வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்கள் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார் .