தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்ற தன் கருத்தை நடிகர் ரஜினி காந்த் மாற்றிக்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  குடியுரிமை சட்டத்தில்  அதிமுக தன்  நிலைப்பாடை மாற்றிக்கொண்டால்  அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும் என்று திருமாவளவன் கூறியிருப்பது குறித்து பேசிய அவர்,  

பொதுவாக மாண்புமிகு முதலமைச்சர் மற்றும்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  பொறுத்த வரையில்,   சிறுபான்மை இன மக்களுக்கு எந்த விதத்தில்  பாதிப்பு வந்தாலும் அதை உடனடியாக எதிர்க்க கூடிய இயக்கமாக உள்ளது  .எனவே  இந்த சட்டத்தின் பிரகாரம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. என்று சொன்னதின் அடிப்படையில்தான் அதிமுக இந்தசட்டத்தை ஆதரித்துள்ளது.  என்றார்.

 

தொடர்ந்து பேசிய அவர்,  இதுவரையில்  பொங்கல் பரிசு தொகுப்பு   3 லட்சத்துக்கும் அதிகமாக  குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல்  32 மாவட்டங்களிலும் கூட்டுறவுத்துறை  அதிகாரிகள் கண்காணித்து  வருகிறார்கள்.  எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. வழங்கப்படும்  கரும்பில் கூட எந்தவிதமான குறைபாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.  ஒரு சில இடங்களில் மூன்று அடி நீளம் வரைக்கும் கரும்புகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு  அரசு  இதற்கு  நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  ஆகவே மக்கள் இத்திட்டத்தில் வெகுவாக பயன் அடைந்துள்ளார்கள். 

தர்பார் படத்தில் சசிகலா பற்றி இடம்பெற்றுள்ள வசனம் குறித்து  கேட்டதற்கு,  ரஜினிகாந்த்  வெற்றிடம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த வெற்றிடம் இன்று இல்லை என்பதை இப்போது நடந்து முடிந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.   வானொலி  நடத்திய கருத்துக்கணிப்பில் ஏறத்தாழ ஒரு கோடி இளைஞர்கள் ஆர்வமாக கருத்து தெரிவித்துள்ளனர்.  அதில் தமிழகத்தில்   ஆளுமை மிக்க தலைவர்கள்  உள்ளார்கள் என்று கூறியுள்ளனர் . 

அதில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் இருந்தும் , பல்வேறு அரசியல் தலைவர்கள் இங்கு  உள்ள நிலையிலும் மாண்பு முதலமைச்சர் அவர்கள் ஆளுமை மிக்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   ஆகவே தமிழகத்தில் வெற்றடம், ஆளுமை இல்லை என்று ரஜினி கூறிவருவதை மாற்றிக்கொள்ளவேண்டும்  என அமைச்சர் செல்லுர் ராஜ் காட்டமாக தெரிவித்தார்.