கொரோனா தொற்று சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரமான நடைபெற்று வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், அங்குள்ள ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து ஆலந்தூர், பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.பின்னர்
மீனம்பாக்கம் மருத்துவ முகாமை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி யார் அவர்களின்  தலைமையிலான இந்த அரசின் சார்பில் கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இப்பணிகளை மேலும் துரிதப்படுத்தும் நோக்கில் அமைச்சர் பெருமக்களை நியமித்துள்ளார். அந்தவகையில், மண்டலங்கள் ஆலந்தூர்,வளசரவாக்கம் மற்றும் அம்பத்தூர் ஆகிய மண்டலங்களுக்கு பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை அந்தந்த பகுதிகளில் பார்வையிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளபட்டு வருகிறது.

பொறுப்பு அதிகாரியாக உள்ள ஆல்பிஸ் ஜான் IAS,அவர்களும் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குழு அனைவரும் சேர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.முன்னதாக சென்னை வர்த்தக மையத்தில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார். இங்கு கொரோனா நோய்தொற்று நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அங்கு 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு அதில் 476 நோயாளிகள்  சிகிச்சை பெற்று வருகிறார்கள். 24 படுக்கைகள் அவசரத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து இடங்களில் மருத்துவ முகாமானது நடைபெற்று வருகிறது. காலையில் இருந்து தற்போதுவரை  84 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கொரனோ அறிகுறி தென்பட்டால் கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் எனவும், தற்போது ஜெயின் கல்லூரியில் முன்னெச்சரிக்கையாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனியாகவும் போதிய இடவசதியோடு 160 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு சத்தான உணவுகள்,மாத்திரைகள் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. 

 

சுழற்சி முறையில் மருத்துவர்கள் மருத்துவ பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை இரண்டே கால் லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.100 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற விகிதத்தில் கண்காணிக்கப்படுகிறது. A அறிகுறிகள் உள்ள நோயாளிகள் வீட்டில் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்க குழுக்கள் அமைக்கபட்டுள்ளது. வருகின்ற நாட்களில் கொரானா வைரஸ் நோயின் தாக்கம் குறையும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் கூறிய அவர் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காரணம் வைரஸ் பாதிப்பு குறையும் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்து உள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள் வெளியே சென்று விடுகிறார்கள், அதனை காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,ஜெ.அன்பழகன் அவருடைய மரணம் மிகுந்த வருத்தம் அடைய கூடிய ஒன்று , அவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றார், சென்னையில் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதற்கு வாய்ப்பில்லை என கூறினார்.