Asianet News Tamil

நீண்ட ஆலோசனைக்குப்பின் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவு..!! அடுத்த நான்கு நாட்களுக்குள் ஒழிக்க பிளான்..!!

தமிழக  முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவின் போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் உத்தரவுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் ,

tamilnadu government announce strict curfew next 4 days
Author
Chennai, First Published Apr 25, 2020, 4:50 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழக  முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவின் போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் உத்தரவுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் ,  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :-  தமிழகத்தில் கொரோனா  வைரஸ் நோய் தொற்று பரவலில் தற்போது நிலை குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 24- 4-2020 அன்று ஆய்வு செய்யப்பட்டது கிராமப்புறங்களில் இந்த நோய்த்தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதிலும் நகர்ப்புறங்களில் இந்த நோய்த் தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .  சென்னை கோவை மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் இந்த நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் இது குறித்து மருத்துவ மற்றும் பொது சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது

 

நகர்ப்புறங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாகக்கினால்  மட்டுமே இந்த நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர் எனவே தற்போதுள்ள சூழ்நிலைகளிலும் மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுனர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் சென்னை கோவை மதுரை சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகரங்களில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படி அரசு முடிவெடுத்துள்ளது அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 26-4- 2020 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 29 4 2020 புதன்கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது .  மேற்குறிப்பிட்ட முழு ஊரடங்கு காலத்தில் கீழ்கண்ட நடைமுறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க  வேண்டும்

அதாவது,  மருத்துவமனைகள் மருத்துவ பரிசோதனை கூடங்கள் மருந்தகங்கள் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை காவல்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மின்சாரத்துறை ஆவின் உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.  இதர மத்திய அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் அம்மா உணவகங்கள் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் வழக்கம்போல் செயல்படும் பொதுவினியோக கடைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் எஸ்சிஐ கிடங்குகள் மற்றும் அவற்றின் சரக்குப் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும். 

பெட்ரோல் டீசல் பங்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் பால் விநியோகம் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் மற்றும் குடிநீர் வழங்கல் வழக்கம் போல் செயல்படும் உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் முதியோர் மாற்றுத்திறனாளி ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர்களுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும் ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள் சமூகநலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும் ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம் கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் அதேபோல் காய்கறி பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நடமாடும்கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

 

மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி இல்லை மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிறகு கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை இறப்பு மற்றும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்கான வெளியூர் பயணம் மேற்கொள்ள இணையதளத்தில் வழியே மட்டும் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் இதர காரணங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழக்கம் போல் செயல்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .
 

Follow Us:
Download App:
  • android
  • ios