டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம்  திரும்பியவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய 615 பேர் தலைமறைவாகி உள்ள நிலையில் தமிழக அரசு இவ்வாறு எச்சரித்துள்ளது. கடந்த மார்ச் 13 முதல் 15ஆம் தேதி வரை டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது ,  அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் .  இதில் தமிழகத்தில் இருந்து சுமார் 1,131 பேர் பங்கேற்றனர் .  அம்மாநாட்டில் கலந்து கொண்டவர்களில்  முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் இருப்பது கண்டிறியப்பட்டது.  இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய 1131 பேரில்  515 பேரை தமிழக அரசு அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தி உள்ளது .

ஆனால் மீதமுள்ள   615 பேர் தலைமறைவாக உள்ளனர் அவர்களின்  செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் டெல்லி சென்று தமிழகம்  திரும்பிய 45 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . அவர்களுக்கு தமிழக அரசு சிகிச்சை வழங்கி வருகிறது இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் செய்தி சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் ,  டெல்லியில் நடந்த மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல பகுதிகளிலிருந்து கலந்து கொண்டதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது .  இவர்களில் பலர் மாநாட்டை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு திரும்பிவிட்டனர் .  அவர்களில் பலர் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது .  இதில் சிலரை மாவட்ட  நிர்வாகத்தால் தொடர்புகொள்ள முடிந்துள்ளது ,  அதே நேரத்தில் பலரையும் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்பு கொள்ள இயலவில்லை .  ஆகவே தொடர்புகொள்ள முடியாத அவர்கள் தாமாகவே முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

 

இவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் இவர்களது குடும்பங்களுக்கு மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்க இயலும் ,  எனவே அவர்கள் பொறுப்புடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லி கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் தலைமறைவாக உள்ளனர் அவர்கள் தாமாக முன்வர வேண்டும் வந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களை குணப்படுத்த முடியும் தயவு செய்து வரவும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இதுவரை அந்த 615 பேர் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் அவர்கள் இன்னும் எத்தனை பேருக்கு நோயை பரப்பிக்கொண்டிருக்கிறார்களோ என்பதுதான் காரணம்.