தமிழகத்துக்கு என்.எல்.சி நிறுவனம் தேவை இல்லை… அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!
மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து நெய்வேலி ஆர்ச் கேட் அருகே பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியைச் சேந்த ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடலூர் மாவட்டத்தில் 66 ஆண்டு காலமாக இந்த மண்ணையும், மக்களையும் ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து நிலத்தடி நீரை உறிஞ்சி கடலில் அனுப்பி, கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக என்.எல்.சி நிறுவனம் மாற்றிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: ரசிகர்களை சந்திக்கும் ரஜினி..அரசியல் பிளானும் இருக்கும் போலயே - ஜெயிலர் டூ அரசியல்.!
40 ஆண்டுகளுக்கு முன்பு 8 அடி இருந்த நிலத்தடி நீர், தற்போது ஆயிரம் அடிக்கு கீழே சென்றுள்ளது. அதற்கு முழு காரணம் என்.எல்.சி. நிறுவனம்தான். ராட்சத பம்புகளை வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி, கடலுக்கு அனுப்பும் தீய செயலில் ஈடுபட்டு வருகிறது. 66 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்த மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் வேலை இல்லை. அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லை. இன்னும் கூடுதலாக 27 ஆயிரம் ஏக்கர் நிலங்களை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. என்.எல்.சி. நிறுவனத்தில், தமிழக அரசுக்கு 4 சதவீதம் பங்கு உள்ளது. இப்படி இருந்தும் கடலூர் மாவட்ட மக்களின் உரிமைகளை காக்கத் தமிழக அரசு தவறி விட்டது.
இதையும் படிங்க: இனி எல்லாமே எடப்பாடி வசம்.. சசிகலா சொன்ன அந்த வார்த்தை - எஸ்கேப் ஆன ஆர்.பி உதயகுமார்!
இதற்காக தமிழக அரசை கண்டிக்கிறோம். என்.எல்.சி. நிறுவனத்தில் அண்மையில் 299 பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் ஒருவர் கூட தமிழர் கிடையாது. 37 ஆயிரம் ஏக்கர் நிலம் கொடுத்தவர்களுக்கே இன்னும் என்.எல்.சி நிறுவனம் சரியா வேலை வழங்கவில்லை. மக்களுக்கு தொடர்ந்து துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை. என்.எல்.சி நிறுவனத்தை மூட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. என்.எல்.சி நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம். இது வெறும் அடையாள போராட்டம்தான். இனி மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம். அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் என்.எல்.சி நிறுனத்திற்கு எதிராக செயல்படுவோம். இனி யாரும் ஏமாற மாட்டோம் என்று தெரிவித்தார்.