கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகளில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம்  தொற்றுநோய் தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில்  நடைபெற்றது இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டார் ,  அம்மா மாளிகை அரங்கத்தில் இந்த  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது , இதுகுறித்து  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-  தமிழக முதலமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகளில் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளார்கள் , அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகளில் குறிப்பாக குடிசை பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு நோய்த்தடுப்பு மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . 

இன்று நடைபெற்ற தன்னார்வலர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் 40 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் ,  பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட தாமாக முன்வந்து விருப்பம் தெரிவித்துள்ளனர் .  பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 650 குடிசை பகுதிகள் உள்ளன பொதுவாக குடிசைப் பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகமாக காணப்படும் குடிசை பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் மாநகராட்சி பணியாளர்களுடன் தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன .  தன்னார்வலர்கள் பொதுமக்களை எளிதில் அணுகி முகக் கவசம் அணிதல் மற்றும் சோப்பு பயன்படுத்தி கைகழுவுதல் ஆகியவற்றின் மூலம் வைரஸ் நோய் தொற்றை தடுக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . 

மேலும் இந்நோய் குறித்து பரவும் தவறான தகவல்கள் குறித்தும்  அவர்களிடையே எடுத்துரைக்க வேண்டும் குடிசை பகுதிகளில் உள்ள பொதுமக்களிடையே சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற  அறிகுறிகளை தெரிவித்தால் தங்களைத் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தை போக்கி தனிமைப்படுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் . அவ்வாறு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களை சிகிச்சைக்கு அழைத்து வரவும் அல்லது மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் வேண்டும் , கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்கான முக்கிய வழிமுறையே சமூக இடைவெளிதான்  அதாவது ஒருவருக்கொருவர் சுமார் ஒரு மீட்டர் இடைவெளியுடன் இருப்பது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது . மேற்கண்ட கருத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் ,  இக் கருத்துக்களை மக்களிடையே தன்னார்வலர்கள் கொண்டு சேர்ப்பதன் மூலம் நோய் தொற்றினை பெருமளவு குறைக்க முடியும் அதேபோல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்கள் கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் . 

இந்த கபசுர குடிநீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 20,000 தூய்மைப் பணியாளர்கள் 5,500 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 11,957 வீடுகள் தோறும் சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணியாளர்கள் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .  அதேபோல்  ஒருவர் தன்னுடைய தேவையான காய்கறி மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகள் வாங்க வெளியே சென்றால் மற்ற பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மற்றும் குடிசைப் பகுதிகளில் தன்னார்வலர்களை கொண்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது .  தன்னார்வலர்கள் ஏற்கனவே மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றி இருந்தாலும் தற்போது நோய் தடுப்பு பணியில் மிகவும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தேவையான முககவசம் கையுறை  உடற்கவச பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஊக்கத்தொகை மாநகராட்சியால் வழங்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.