Asianet News TamilAsianet News Tamil

உங்கள் அன்பால் மகிழ்கிறேன்..! கேரளாவை மெச்சிய தமிழக முதல்வர்..!

கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்!

tamilnadu cm praises kerala
Author
Chennai, First Published Apr 5, 2020, 8:35 AM IST

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் 3,082 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இருக்கும் மருத்துவமனைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Traffic hit at Tamil Nadu-Kerala border over Aliyar issue - The Hindu

இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேர் கொரோனாவால் பதிப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் தமிழ் நாட்டில் 300 க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அண்டை மாநிலமான கேரளா, தமிழக எல்லைகளை மூடி, இணைப்பை துண்டித்து விட்டதாக செய்தி பரவியது. ஆனால் அதை அதிரடியாக மறுத்திருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன், அது போலியான செய்தி என்றும் தமிழகம் தங்கள் சகோதர மாநிலம் என கூறியுள்ளார்.

 

இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில், 'கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்!; என்று கேரள முதல்வர் பேசிய காணொளியை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios