அண்டை மாநில முதல்வர்களையே அசரவைத்த எடப்பாடி... ஒரே நாளில் இத்தனை அறிவிப்புகளா?
அதே சமயம் மக்களையும் காக்க வேண்டும் என்று முடிவெடுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரே நாளில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தற்போது தமிழகத்தில் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கண்கொத்தி பாம்பாக ஆய்வில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்பெயினில் கொத்து, கொத்தாய் மடியும் மக்கள்... ஒரே நாளில் இத்தனை மரணமா?
மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் 24 மணி நேரமும் கொரோனாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களுக்கு பிழைக்க சென்ற வடமாநில தொழிலாளர்கள் பசிக்கொடுமை தாங்காமல் சொந்த ஊருக்கு நடைபயணமாக கிளம்பியுள்ளனர்.
இதையும் படிங்க: எடப்பாடி ஏற்பாட்டில் மெகா யாகம்... மக்களை பாதுகாக்க வேண்டுதல்....!
ஒருபுறமோ விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு,நடுத்தர வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா என்ற கொடிய அரக்கனையும் ஒழிக்க வேண்டும், அதே சமயம் மக்களையும் காக்க வேண்டும் என்று முடிவெடுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரே நாளில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
முதலமைச்சரின் அதிரடி அறிவிப்புகள் இவை தான்,
கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்த 3 மாதம் கால அவகாசம்
வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத் தொகை செலுத்த 3 மாதம் அவகாசம்
மீனவ மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றவர்கள் தவணை செலுத்த 3 மாதம் கால அவகாசம்
சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30ம் தேதி வரை அவகாசம்
மார்ச், ஏப்ரல் மாத வீட்டு வாடகையை உரிமையாளர்கள் 2 மாதங்கள் கழித்து வசூலித்துக்கொள்ள உத்தரவு
சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள நிறுவனங்கள் பாரமாரிப்புக் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளை செலுத்த 3 மாத கால அவகாசம்
சிப்காட் நிறுவனத்திடம் மென் கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 3 மாத கால அவகாசம்