Asianet News TamilAsianet News Tamil

ஒரே அறிவிப்பில் இந்தியாவையே அதிர வைத்த எடப்பாடி பழனிச்சாமி..!! அரசு ஊழியர்களை குளிர வைத்த அதிரடி..!!

அவர்களது குடும்பத்திற்கு நான் ஏற்கனவே அறிவித்த 10 லட்சம் ரூபாய்க்கு பதிலாக 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் . 

tamilnadu cm edapadi palanichamy announce if die by corona 50 lakh amount
Author
Chennai, First Published Apr 22, 2020, 2:15 PM IST

கொரோனாவால்  உயிரிழப்பவர்களின் உடலை பாதுகாப்புடனும் அரசு மரியாதையுடனும் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , கொரோனா  பணியில் ஈடுபட்டுள்ள ,  மருத்துவத்துறை , காவல்துறை ,  உள்ளாட்சித்துறை ,  மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களும் ஒரு வேளை நோய்த்தொற்று ஏற்பட்டு அதனால் அவர்கள் உயிரிழக்க நேரிட்டால்,  அவர்களது குடும்பத்துக்கு வழங்கி வந்த  10 லட்சம் ரூபாய்க்கு பதிலாக 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் .  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :- கொரோனா தொற்றுநோய் போராட்டத்தில் முன் நின்று பணிபுரியும் அலுவலர்கள் ,  மருத்துவர்கள் ,  செவிலியர்கள் ,  மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் காவல்துறை மற்றும் பிற அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் எவருக்கேனும் இந்த நோய் ஏற்பட்டால் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும். 

tamilnadu cm edapadi palanichamy announce if die by corona 50 lakh amount

 எனவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சம் கொடுக்கப்படும் எனவும் எதிர்பாராதவிதமாக உயிரழப்பு ஏற்படும் பட்சத்தில்  அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக 10 லட்சம்  ரூபாய் வழங்குவதுடன் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் எனவும் நான் ஏற்கனவே அறிவித்து இருந்தேன் , கொரோனா நோய் தடுப்பு பணியில் அரும் பணியாற்றி வரும் மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்கள் எவரேனும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டம் மூலமாக வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது , இந்த போர்க்கால பணியில் ஈடுபட்டுள்ள அரசு துறைகளான மருத்துவத் துறை காவல் துறை உள்ளாட்சித் துறை மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டு நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்க நேரிட்டால் ,  அவர்களது குடும்பத்திற்கு நான் ஏற்கனவே அறிவித்த 10 லட்சம் ரூபாய்க்கு பதிலாக 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் . 

tamilnadu cm edapadi palanichamy announce if die by corona 50 lakh amount

மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும். இத்தகைய தன்னலமற்ற பணியை முன்னின்று செய்யும் மேற்சொன்ன நபர்கள் தனியார் மற்றும் அரசு துறையிலிருந்து இழப்பை சந்திக்க நேர்ந்தால் அவர்களின் பணிக்கு நன்றிக்கடன் செலுத்துவது அரசின் கடமை என்பதை கருத்தில் கொண்டு ஊழியர்களின் உடலை பாதுகாப்புடனும் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய மாண்புமிகு அம்மாவின் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் .கொரோனா தடுப்பு பணியில்  பணியாற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் இப்பணியில் ஈடுபட்டுள்ள பிற துறை அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பணியில் ஈடுபட்டு உயிர் இழக்க நேரிடும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின் பணியை பாராட்டி அவர்களுக்கு உரிய விழுதுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்

tamilnadu cm edapadi palanichamy announce if die by corona 50 lakh amount

தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்களின் எவருக்கேனும் கொரோனா தொற்று   ஏற்ப்பட்டால் மருத்துவத்துறையின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ப அந்த மருத்துவ பிரிவில் பணியாற்றும் அனைவருக்கும் பரிசோதனை செய்யவும் அந்த மருத்துவமனை பிரிவில் முழுமையாக நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கு பிறகு மீண்டும் அப்பிரிவில் மருத்துவப் பணிகளை தொடரவும் அனுமதிக்கப்படும் . தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சென்னை மாநகரத்தில் நோய்தடுப்பு பணிகளில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்தவும்

  tamilnadu cm edapadi palanichamy announce if die by corona 50 lakh amount

நோய்த்தொற்று ஏற்பட்டு அவருடனான தொடர்புகளை உடனுக்குடன் கண்டறிந்து சோதனைக்கு  உள்ளாகவும் மாநகர பகுதிகளில் மூச்சிறைப்பு காய்ச்சல் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ளவர்களை உடனுக்குடன் குறித்த பரிசோதனை செய்யவும் ,  இதன் மூலம் சென்னை மாநகரில் தற்போது செய்யப்பட்டு வரும் பரிசோதனைகளை கணிசமாக உயர்த்தவும் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் பெற்று நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் . 
 

Follow Us:
Download App:
  • android
  • ios