2020ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி ஆளுநர் பன்வரிலால் ப்ரோஹித் உரையுடன் தொடங்கியது.  பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துடன் 9ம் தேதி கூட்டம் நிறைவு பெற்றது. இந்தநிலையில் 2020-2021 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த ஆட்சியில் அதிமுக அரசு தாக்கல் செய்யயும் கடைசி முழுநேர பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். பட்ஜெட் தாக்கல் முடிந்தவுடன் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும். தொடர்ந்து வரும் நாட்களில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற இருக்கிறது.

இதனிடையே அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அதிமுக அரசு அறிவித்து வருகிறது. இது பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கு நெருடலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.