Asianet News TamilAsianet News Tamil

இந்த அளவுக்கு விவரமானவரா எல். முருகன்.! ராகுலுக்கும், சிதம்பரத்துக்கும் வங்கி குறித்து வகுப்பெடுத்து அசத்தல்

முதலில் ராகுல் காந்தி  Write Off மற்றும் Waiver இந்த இரண்டுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை அறிய வேண்டும். துரதிருஷ்ட வசமாக நாம் இரண்டையுமே "தள்ளுபடி" என்று புரிந்து கொள்கிறோம்

tamilnadu bjp leader l murugan counter against p chidambaram and rahul gandhi
Author
Chennai, First Published Apr 29, 2020, 6:17 PM IST

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவலில், இந்தியாவின் பெரு வணிக நிறுவனங்களுக்குரூ.  68, 607 கோடி ரூபாய் வாராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  முதலில் ராகுல் காந்தி  Write Off மற்றும் Waiver இந்த இரண்டுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை அறிய வேண்டும். துரதிருஷ்ட வசமாக நாம் இரண்டையுமே "தள்ளுபடி" என்று புரிந்து கொள்கிறோம். முதலில் Write off என்பதைப் பார்ப்போம். இதைத் தமிழ்ப்படுத்தினால் "அழித்து எழுதல்" என்று ஓரளவுக்குப் பொருத்தமாகக் கூறலாம். 

நமது வங்கிகளில் வாராக்கடன் என்று வகைப்படுத்துவதில் - தற்போதுள்ள நடைமுறையில் - உள்ள சிக்கலை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் a) வீட்டுக் கடன் b) விவசாயக் கடன்  c) வாகனக் கடன் என 3 கடன்களைப் பெற்றுள்ளார் என வைத்துக் கொள்வோம். இதில் 2 கடன்களை அவர் முறையாகச் செலுத்தி வருகிறார் - மீதமுள்ள ஒரு கடனில் சில தவணைகள் நிலுவையாகி - அந்த ஒரு கடன் மட்டும் - வாராக்கடன் அல்லது 'செயல் படாத கடன்'- வட்டியும் அசலும் வசூல் ஆகாத கடன் - என்று வகைப்படுத்தப் பட்டாலும் கூட, அவர் ஒழுங்காகச் செலுத்தும் மற்ற 2 கடன்களின் தொகைகளும் சேர்த்தே NPA ஆகிவிடும்! 

tamilnadu bjp leader l murugan counter against p chidambaram and rahul gandhi

Customer ID என்று அந்த Borrower ன் பெயரில் என்ன எல்லாம் அந்த ID ல் உள்ளதோ அந்தக் கடன்கள் எல்லாம் சேர்ந்து ஒட்டுமொத்தமா NPA தொகையாக மாறிவிடும். இந்தப் புரிதலுடன் நாம் முதலில் WRITE OFF ஐ பார்க்க வேண்டும். வங்கிகள் ஒவ்வோர் ஆண்டும் தங்களின்  BALANCE SHEET ஐ சமர்ப்பிக்கின்றன. இந்நிலையில் இப்படித் தேங்கிப் போகும் NPA எனப்படும் வாராக்கடன்கள் அவற்றின் BALANCE SHEETஐ பாதிக்கும். எனவே வங்கிகள் தங்களின் BALANCE SHEET ஐ "சுத்தம் செய்து கொள்ள" இந்த WRITE OFF என்னும் வழிமுறையைத் தேர்ந்தெடுக்கின்றன.  அதாவது கிளைகள் அளவில் அந்தக் கடன்கள், அந்த BORROWER ன் கடன்  கணக்கு எண்ணுக்கு நேராக "WRITE OFF " எனக் காட்டப்பட்டு தலைமை அலுவலகத்தின் வரம்புக்குப் போய்விடும். அந்தத் தொகைகளை வங்கியின் தலைமை அலுவலகம் RECOVERABLES என்றே வைத்துக் கொள்ளும்.  

அதாவது  வாடிக்கையாளரிடம் இருந்து அத்தொகையை "வசூலிக்கும் உரிமை" யை வங்கி இழந்துவிடவில்லை. மேலும் Credit Informatio Bureau of India Limited (CIBIL)  என்ற அமைப்பு உள்ளது. அதன் ரிக்கார்டுகளில் இவ்வாறு யார் பெயரில் எவ்வளவு தொகை WRITE OFF செய்யப்பட்டது என்ற தகவல்கள் வங்கிகளால் அனுப்பப்பட்டு விடும். அதாவது வங்கிகளின் கிளைகளிலும் வாடிக்கையாளரின் கடன் கணக்கு - ACCOUNT CLOSED - என்று காட்டாது! அவர் கணக்கு எண்ணை கம்ப்யூட்டரில் தட்டினால் "WRITE OFF" என்ற குறிப்பு வருமே தவிர ACCOUNT CLOSED என்று காட்டாது. 

tamilnadu bjp leader l murugan counter against p chidambaram and rahul gandhi

மேலும் தலைமை அலுவலகத்தின் பார்வைக்கு மாற்றப்பட்டு, WRITE OFF என வகைப்படுத்தப்பட்ட இக்கணக்கு - கடனாளியின் பெயருடன் CIBIL  அமைப்பின் ரிகார்டுகளுக்கும் போய்விடும் - இவ்வாறு அது 10 வருடம் CIBIL  பதிவேட்டில் இருக்கும். இப்போது அந்த WRITE OFF செய்யப்பட்ட கடனாளி, எந்த வங்கிக்குச் சென்று வேறு ஏதாவது கடன் கேட்டாலும் CIBIL REPORT ல் அவர் பெயரில் ஏற்கனவே WRITE OFF செய்யப்பட்ட கடன் விபரங்கள் வந்துவிடும். அந்தத் தொகையை நேர் செய்து, குறிப்பிட்ட வங்கியில் இருந்து அதற்கான சான்றிதழை அவர் பெற்றால் மட்டுமே வேறு கடன்கள் வழங்க முடியும். மேலும் சட்டபூர்வமாகவே அந்த WRITE OFF  கடன் தொகையை 'வசூலிக்கும் உரிமை' யை (RIGHT TO RECOVER) வங்கிகள் இழப்பதில்லை. அடமானமாகப் பெறப்பட்ட சொத்துகளை  MORTGAGE SUIT போட்டு வசூலிக்கலாம். ஒரு வேளை அந்தக் கடனாளிக்கு வேறு ஏதேனும் சொத்துக்கள் - அடமானம் வைக்கப்படாமல் இருப்பின் - அவற்றையும் MONEY SUIT போட்டு வசூல் செய்யலாம். ABJ எனப்படும் ATTACHMENT BEFORE JUDGEMENT  எனப்படும் வாய்ப்பைப் பயன்படுத்தலாம். எனவே WRITE OFF என்பது இவ்வளவு வாய்ப்புக்களையும் உள்ளடக்கிய ஒரு கணக்கியல் நடைமுறை. (ACCOUNTING PROCEDURE). 

tamilnadu bjp leader l murugan counter against p chidambaram and rahul gandhi

ஆனால் WAIVER என்பது கடனை - முழுவதுமாகவோ, வட்டியை மட்டுமோ - சில தவணைகளையோ தள்ளுபடி செய்வது. இது பயிர்க்கடன் போன்ற விவசாயம் சார்ந்த கடன்களில் பருவமழை பொய்ப்பது, வெள்ளத்தில் பயிர்கள் அழிவது போன்ற இயற்கைப் பேரிடர்  சமயங்களில் விவசாயிகளுக்குப் பெரும்பாலும் வழங்கப்படும். இது WAIVER. இந்த WAIVER என்பது வங்கியின் லாப நஷ்டக் கணக்கில் நஷ்டம் என்று காட்டித் தள்ளுபடி செய்யப்படும். எனவே WRITE OFF க்கும், WAIVER க்கும் உள்ள வேறுபாட்டை அறிய வேண்டும். இதற்கான சரியான விளக்கத்தை மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், புள்ளி விவரங்களோடு ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார்.  வாராக் கடன் விசயத்தில் புதியதாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

tamilnadu bjp leader l murugan counter against p chidambaram and rahul gandhi

விதி முறைகள் கடுமையாக்கட்டுள்ளன.  2015 முதல் ரூ. 50 கோடிக்கு மேல் வாராக்கடன் உள்ளவர்களின் கணக்குகளை தீவிரமாக கண்காணிக்குமாறு வங்கிகள் அறிவுறுத்தப் பட்டுள்ளன. ஏமாற்றி விட்டு வெளிநாடு தப்பயோடுவோர் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது 9967 திரும்பி வரும் வழக்குகள் மற்றும் 3515 முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. திவால் சட்டம் 2016 மூலம் பெரு நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  உதாரணமாக பூஷன் ஸ்டீல்ஸ் என்னும் ஒரு நிறுவனம் மூலம் மட்டும் ரூ.34000 கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்துள்ளது. அதே போல் எஸ்ஸார் ஸ்டீல்ஸ் மூலம் ரூ. 40000 கோடிக்கு மேலான தொகை வந்துள்ளது.

tamilnadu bjp leader l murugan counter against p chidambaram and rahul gandhi

எனவே முந்தைய காங்கிரஸ் ஆட்சி செய்த தவறுகளை மோடி அரசு சரி செய்து வருகிறது. ஆனால் ராகுல் காந்தி குறை கூறி வருகிறார். மேலும் அவர்களின் ஆட்சியில் 2009-10 முதல் 2013-14 வரை நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.1,45,226 கோடி ரூபாய் write off செய்யப்பட்டுள்ளது. இதுதான் உண்மை நிலை.  மோடியின் இந்த அரசாங்கத்தில் பொதுச் சொத்தை யாரும் கொள்ளையடித்து விட முடியாது  என்பது ராகுல், ப. சிதம்பரம் போன்றவர்களுக்கு நன்கு புரியும். அவர்கள் கொடுத்த கடனைத்தான் மோடி அரசு மீட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் புரியும். குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கிறது.   பொய்க் குற்றச்சாட்டுகளை எழுப்பி கொரோனா பணியை திசை திருப்பி கெட்ட பெயர் உருவாக்க முயற்சிக்கிறது. ஆனால் பொது மக்களுக்கு உண்மை புரியும். பொதுமக்களை ராகுலும் ப.சிதம்பரமும் ஏமாற்ற முடியாது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios