ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, பண புழக்க பாதிப்பு காரணமாக, ஆட்குறைப்பு, வேலை இழப்பு, சம்பள குறைப்பு, சம்பள துண்டிப்பு, கட்டாய விடுப்பு, பல மாதங்களாக சம்பளம் வராத நிலை போன்ற பல இன்னல்களை அமீரக மனித வள வழங்கல் துறையில் வேலை பார்க்கும் இந்திய தொழிலாளர்கள் சந்தித்து வந்த சூழலில், கொரோனாவின்  பாதிப்பால் சரிவர பராமரிக்க படாத தங்கும் வசதி, இதன் காரணமாக பல தொற்று நோய்கள், போதுமான மருத்துவ வசதி இல்லாமை, எல்லாவற்றிக்கும் மேலாக அடிப்படை உணவு வசதி கூட இல்லாமல் பட்டினியால் பரிதவிக்கும் நிலை போன்ற மேலும் பல சவால்களால் நிலை குலைந்து தவிக்கிறார்கள். இந்த சூழலில், துபாய், சத்வா பகுதியில் வசித்து வந்த தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களை சார்ந்த 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்காத காரணத்தால் வெறும் சோற்றை வடித்து அதில் தண்ணீர் கலந்து அதை சாப்பிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

 

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, அங்கு உணவும் கூட கிடைக்காமல் பட்டினியால் இவர்கள் பரிதவித்தனர். புனித ரமலான் நோன்பு காலத்தில் தமது கடமைகளை சரி வர செய்ய முடியாத இஸ்லாமிய தொழிலாளர்களும் இதில் அடங்குவர். அந்த சூழலில், தமது பரிதாப நிலையை துபாயில் வாழும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி மூலம் பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களிடம் எடுத்து சென்றதால் இன்று மரண பிடியில் இருந்து இவர்கள் காப்பாற்ற பட்டு இருக்கிறார்கள். தகவல் அறிந்த உடன், துபாயில் வசிக்கும் கட்சி ஆதரவாளர் மகாதேவன் அவர்களை தொடர்பு கொண்டு நேரடியாக தகவலின் உண்மை நிலையை உறுதி செய்து, உடனடியாக பட்டினியால் தவிக்கும் தொழிலாளர்களுக்கு அவர் மூலம் தேவையான உணவு வசதிகளை ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாமல்,  களத்தில் இறங்கி தமது நேரடி முயற்சியால் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சென்னை நிர்வாகி திரு.சக்கரவர்த்தி அவர்கள் வழியாக 

பாரதீய ஜனதா கட்சியின், அமீரகவாழ் இந்திய அமைப்பின் திரு. சந்திரபிரகாஷ் அவர்களை தொடர்பு கொண்டு என்னென்ன உதவிகளை செய்ய முடியும் என்று உறுதி செய்து, கட்சியின் , மாநில தலைவர். டாக்டர். முருகன் அவர்களிடம் இந்த நிலையை விளக்கினார். தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின், அமீரகவாழ் அமைப்பின் திரு. சந்திரபிரகாஷ் மற்றும் திரு. மகாதேவன் அவர்கள், இந்த பிரச்சினையை இந்திய தூதரகம் வழியாக முறையான நிரந்தர தீர்வு காண முன்முயற்சி எடுத்து வருகிறார்கள். கண்ணீர் மல்க ரமலான் நோன்பின் பிரார்த்தனையில் பாரதீய ஜனதா கட்சியின், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை இந்த தொழிலாளர்கள் நினைவுகூர்ந்தது அவருக்காகவும் பிரார்த்தனை செய்த நிகழ்ச்சி நமது நெஞ்சை நெகிழ செய்தது என தமிழக பாஜக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.