தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 

மிக முக்கியமான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 6-ம் தேதி தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஜனவரி 6-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் பேரவை கூடுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 

அதன்பின்னர் சபாநாயகர் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த ஆய்வு கூட்டத்தில் எத்தனை நாட்கள் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இதில், சபாநாயகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.