tamilisai.vanathi seenivasan warn h.raja
பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது தவறு என்றும், அவர்களை கீழ்த்தரமாக தாக்குவதையும் எச்.ராஜா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, வானிதி சீனிவாசன், காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணி ஆகியோர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்வி குறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், , "தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே." என்று பதிவிட்டிருந்தார்.

எச்.ராஜாவின் இந்த கீழ்த்தரமான பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் துவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின்தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத்தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தன் டவிட்டர் பதிவில்
பெண்கள் அரசியலில், பொது வாழ்வில் வந்தாலே அவர்களை மலினப்படுத்தியும், கீழ்த்தரமாக விமர்சித்தும், அவர்களின் உடல் நிலை, முக அமைப்பு இவைகளை பற்றி நாகரீகமற்ற முறையிலும் ஆபாசமாகவும் சித்தரிக்கும் போக்கு கவலைக்குரிய வகையில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என தெரிவித்துள்ளார்..

இந்த கீழ்மைக்கு அவர்களின் தகுதி, பதவி, கல்வி அறிவு இது ஒன்றும் தடை இல்லை. பெண்களை வெறும் போகப்பொருளாக, ஒரு நுகர்வு பண்டமாக அல்லாமல் சக மனுஷியாய், தாயாய், மகளாய், சகோதரியாய், தோழியாய் பாருங்கள் மிஸ்டர் ராஜா என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரிணி செய்தியாளர்களிடம் பேசும்போது, எச்.ராஜா வரம்பு மீறி பேசுகிறார். அவர் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ,தன்னுடைய பதிவுக்கு ராஜா மன்னிப்புக் கோட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
