Tamilisai speech with journalist
நீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் பலர் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சூழலில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழிசையிடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ய முடியாதா என்பது குறித்தும் தமிழகத்தின் நீட் தேர்வுக்கான கட்டமைப்பு வசதி குறித்தும் சரமாரியாக பத்திரிக்கை நிருபர்கள் கேள்விகள் கேட்ட போது அதற்கு பதில் சொல்லமுடியாமல் தடுமாறினார் தமிழிசை.
மத்திய அரசின் நீட் தேர்வு குறித்த இந்த செயலுக்கு மலுப்பலாக பதில் சொல்லி சமாளித்தார். ஒரு கட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும் சிபிஎஸ்இ இத்தகைய செயலுக்கு எதிராகவும் கண்டனும் தெரிவித்தார்.
