இந்தியாவின் இளம்வயது ஆளுநர் என்கிற சிறப்பை தெலுங்கானா ஆளுநரான தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1-ம்  தெலங்கானா கவர்னராக அறிவித்தார். இதனையடுத்து கடந்த 8ம் தேதி தமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கு தெலுங்கு மொழி கற்ரு அசரடித்து வருகிறார் தமிழிசை. 
 
இந்தியாவில் ஆளுநர்களின் சராசரி வயது 73. பெரும்பான்மையான ஆளுநர்கள் 70 முதல் 79 வயதுக்குள் உள்ளனர். மொத்தம் உள்ள 28 ஆளுநர்களில் அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு ஒரே ஆளுநர் 7 பேர் 60 வயதுகளிலும், 14 பேர் 70 களிலும், 6 பேர் 80களிலும் உள்ளனர். ஒருவர் மட்டுமே 60 வயதுக்கு கீழ் உள்ளார். அவர் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தான். அவருக்கு 58 வயது தான் ஆகிறது.

அவருக்கு அடுத்த இடத்தில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் 60 வயதாகிறது. முதல் முறை ஆளுநர்கள் 19 பேர், 9 பேர் பெண்கள். ஆந்திர மாநில கவர்னர் விஸ்வபூஷண் ஹரிசந்தன் தான் அதிக வயதானவர். அவருக்கு 85 வயதாகிறது.