Asianet News TamilAsianet News Tamil

ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வுக்கு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு... அண்ணன் துரை வாக்கை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அக்கா தமிழிசை..!

அண்ணன் துரைமுருகன் ஆலோசனைப்படி மு.க.ஸ்டாலின் 25 ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வு? தேர்தல் முடிவுகளுக்கு பின் டெல்லி குதிரைப் பந்தயத்தில் பங்கேற்க அழைப்பு?

tamilisai soundarajan has criticized stalin
Author
Tamil Nadu, First Published May 13, 2019, 1:38 PM IST

3ம் அணியை உருவாக்கும் முயற்சியாக ஸ்டாலினை இன்று மாலை சந்திக்கிறார் கே. சந்திரசேகரராவ் சந்திக்க இருக்கும் நிலையில் அணி மாறிகளின் தெருக்கூத்து என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கடுமையாக விமர்சித்துள்ளார். tamilisai soundarajan has criticized stalin

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். 3ம் அணியை உருவாக்கும் முயற்சியாக ஸ்டாலினை சந்திரசேகரராவ் இன்று மாலை சந்திக்க உள்ளார். 3வது அணிக்காக சந்திரசேகரராவ் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். குமாரசாமியையும் சந்திக்க உள்ளார். 

 

இந்நிலையில்தான், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்வீட்டர் பக்கத்தில், "அண்ணன் துரைமுருகன் ஆலோசனைப்படி மு.க.ஸ்டாலின் 25 ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வு? தேர்தல் முடிவுகளுக்கு பின் டெல்லி குதிரைப் பந்தயத்தில் பங்கேற்க அழைப்பு? இங்கே திண்ணை நாடகம்.tamilisai soundarajan has criticized stalin

அடுத்து டெல்லியில் கட்சி / அணி மாறிகளின் தெருக்கூத்து?" என்று விமர்சித்துள்ளார். சில தினங்களுக்கு முன் ’’மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் திறமைக்கு அவர் இன்னும் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் ஜனாதிபதி ஆகும் தகுதி இருக்கிறது’’ என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios