சென்னையை சிங்கப்பூர் ஆக்குவதாக சொன்ன ஸ்டாலின் அவர்களே..! தமிழிசை தாறுமாறு கேள்வி..!  

கொளுத்தும் கோடை வெயிலில் வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்னொரு பக்கம் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் பஞ்சம் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்தியாவின் பெரும் தலைநகரங்களிலும் கூட வாட்டி வதைக்கிறது  

இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து தண்ணீர் பஞ்சத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் எதிரொலியாக பல்வேறு ஹோட்டல்கள் நிறுவனங்கள் முடங்கியுள்ளது. ஊழியர்கள் அவரவர் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என ஐடி நிறுவனங்கள் கூட தெரிவித்துள்ளன. இந்நிலையில் அரசியல் தலைவர்களும் தண்ணீர் பிரச்சினைக்கு என்ன தீர்வு கண்டீர்கள் என மாற்றி மாற்றி குறை சொல்வதும் பார்க்க முடிகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அதில், 

"சென்னையை சிங்கப்பூர் ஆக்குவதாக சொன்ன ஸ்டாலின் அவர்களே வீராணம் குழாயில் ஊழல் கூவத்தில் படகு விடுவதாக ஊழல் சென்னையை சுற்றிலும் ஏரிகுளங்கள் காணாமல் போனதும் ஆற்று மணல் கொள்ளை போனதும் திமுக ஆட்சி காலத்தில்தானே. சென்னை குடிநீர் பிரச்சனைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன? தொலைக்காட்சி வழங்கி தேர்தல் வெற்றி தேடிய நீங்கள் தண்ணீர் பிரச்சினைக்கு செய்துமுடித்த தொலைநோக்குத்திட்டங்கள் என்ன? தினம் ஒரு அறிக்கைதான் தீர்வாகுமா.? என கேட்டுள்ளார்.