Asianet News TamilAsianet News Tamil

தமிழில் படிப்பதை நான் தடுக்கிறேனா.? அரசியல்வாதிகள் இதை மட்டும் சொல்ல வேண்டாம்.! தமிழிசை ஆவேசம்

தமிழிசை தமிழ் படிப்பதை  தடுக்கிறார் என்ற நாராயணசாமி குற்றச்சாட்டை வன்மையாகவும் உறுதியாகவும் மறுக்கிறேன் எனவும் தமிழ் என் பெயரில் மட்டுமல்ல உயிரிலும் இருக்கிறது எனவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்  தெரிவித்துள்ளார்.
 

Tamilisai denied the allegation that he was banned from reading in Tamil
Author
First Published Dec 22, 2022, 8:18 AM IST

கவர்னர் ஆனது எப்படி.?

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்தா பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய, தமிழிசை சவுந்தரராஜன்,  நான் முழுமையாக ஆசிரியர்களால் தான் நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன் எனக்கூறியவர்,தன் அப்பாவிற்கு நான் என்ன படிக்கிறேன் என கூட தெரியாது. அம்மா அப்பாவின் கவனம் அளவோடு இருந்தாலும் நான் டாக்டராகி, அரசியல்வாதி ஆகி இன்று கவர்னராகி இருப்பதாக தெரிவித்தார். நம்மை நாமே பார்த்துகொள்ள வேண்டும்.  நிறைய வீட்டில் அம்மா,அப்பா சொல்வதை கேட்க வேண்டும் என்ற மனநிலை தற்போதுள்ள குழந்தைகளிடம் இல்லை என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், சிபிஎஸ்இ பாடத்திட்டம்  குழந்தைகளுக்கு சாதகமா தான் இருக்கும். அனைவரும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க போகிறது. புதுச்சேரியில் மூன்று வகையான போர்டுகளை பின்பற்றுகிறோம்,  

Rafael Watch : டீக்கடையில் எப்போது ரபேல் வாட்ச் பற்றி பேசுகிறார்களோ அப்போது பில்லை வெளியிடுவேன்- அண்ணாமலை
உயிரில் கலந்தது தமிழ்

தமிழ் வழிபாடக்கல்வி , தமிழகத்தின் பாடக்கல்வி, காரைக்கால் புதுச்சேரியிலும்  , மாகியில் மலையாள வழி பாடக்கல்வி,  ஏனாவில் ஆந்திரா பாடக்கல்வி என துணை நிலை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று விதமான கல்வியை கற்றுக் கொண்டிருக்கிறார்கள், ஒருமித்த ஒரே மாதிரியான எந்த விதமான ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி கிடைக்க வேண்டும் என்பதை எண்ணித்தான் இன்று நாம் அந்த கல்வியை கொண்டுவருவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார். தமிழ் படிப்பதை தமிழிசை தடுக்கிறார் என்ற நாராயணசாமி குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன் உறுதியாக மறுக்கிறேன் எனவும் தமிழில் என் பெயரில் மட்டுமல்ல உயிரிலும் இருக்கிறது என தெரிவித்தார். நாராயணசாமி உள்ளிட்டோர் முதலமைச்சராக இருந்து ஒரே மாதிரியான கல்வியை கொண்டு வந்திருக்க வேண்டும், கொண்டு வரவில்லை, நாங்கள் ஒரே மாதிரியான கல்வியை கொண்டுவர முயற்சி செய்கிறோம், நான் சகோதரியாக அந்த மாநிலத்தில் இருந்து இதை கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்கிறேன் எனவும் அறிவாற்றல் உள்ள குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம் என கூறினார். 

அரசியல்வாதிகள் சொல்ல வேண்டாம்

சிபிஎஸ்சி படித்த மாணவர்கள் தமிழ் வரவில்லை என கூறினார்களா என கேள்வி எழுப்பினார்.குழந்தைகளின் அறிவாற்றலுக்கு நாம் தீனி போடுவதில்லை எனவும் குழந்தைகள் இன்னொரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கற்றுக் கொள்ளும், மருத்துவராக இருப்பதால் கூறுகிறேன் இந்த மூளை எட்டு வயது வரைக்கும் எத்தனை மொழிகளை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும், ஆனால் அந்த எட்டு வயது வரை குழந்தைகளை நாம் இன்னொரு மொழியை படிக்க விடுவது கிடையாது. ஆக இன்னொரு மொழியை கற்றுக் கொள்வது அவர்களின் வாய்ப்புகளை பெருக்குவதற்காக தான் எனவும் எல்லாவற்றிலும் அரசியலைப் புகுத்தி சிபிஎஸ்சி வேண்டாம் இன்னொரு மொழி வேண்டாம்,  நீட்டா வேண்டாம் என்பதை என்பதை கல்வியாளர்கள், மாணவர்கள் சொல்லட்டும் அரசியல்வாதிகள் இதை சொல்ல வேண்டாம் என கூறினார்.

இபிஎஸ் தாக்கல் செய்த அதிமுகவின் வரவு, செலவு கணக்கு..! அங்கீகரித்ததா தேர்தல் ஆணையம்..? அதிர்ச்சியில் ஓபிஎஸ்

எனக்கு அக்கறை அதிகம்

மேலும் இன்னொரு மொழியை தருவது மாணவர்களுக்கு சுமையாக இருக்காது எனவும் நாராயணசாமியை விட எனக்கு அதிகமான அக்கறை இருக்கிறது தினமும் தெரிவித்தவர், அனைவரிடமும் கருத்து கேட்டு அனைவருக்கும் நேர்மையான கல்வி கிடைக்க வேண்டும் என முடிவெடுத்தது தான் என தெரிவித்தார். புதுவையில் நாராயணசாமி ஆட்சியில் இருக்கும் போது நல்ல கல்வியை முழுமையாக ஒரு போர்டை கொண்டுவர முடியவில்லை நாங்கள் அதை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம் அதனால் அந்த குற்றச்சாட்டுகளை நான் புறந்தள்ளுகிறேன். குழந்தைகளுக்கு நல்ல கல்வி  வேண்டும் என்பதற்காக என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

வரும் 24ம் தேதி திமுக நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் கூட்டம்... அறிவித்தார் துரைமுருகன்!!

Follow Us:
Download App:
  • android
  • ios