போலி பகுத்தறிவாளர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியதும் கொடி ஏற்றியதும் அமாவாசை நாளில்தான் என கமலை தாறுமாறாக கிழித்திருக்கிறார் தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை அமாவாசை நாளில் நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர் நிலைக்குழுவைக் கலைத்துவிட்டு கட்சியின் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அமாவாசை என்பது நல்ல காரியங்களைத் தொடங்குவது வெற்றி அடையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் குறிப்பிட்டே கமல்ஹாசனை விமர்த்துள்ளார் தமிழிசை.

பிஜேபியின் தமிழக  தலைவர் தமிழிசை இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "கூட்டணி அமைக்க நாங்கள்தான் அழைக்க வேண்டும். கூட்டணி குறித்து பிஜேபிதான் முடிவு எடுக்க வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி என்பது கிடையாது. செப்டம்பரில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்" என்று கூறினார். 

இதனையடுத்து பேசிய தமிழிசை, "மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதும், கட்சியின் கொடி ஏற்றியதும் அமாவாசை நாளில் தான். அதுமட்டுமல்ல, கட்சியின் நிர்வாகிகளை அமாவாசை நாளில் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்தவர் போலி பகுத்தறிவாளர்" என்று குற்றம் சாட்டினார்.