தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிட்டார். அவரது எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். இதில், இதில், தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி சுமார் 5,63,143  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை, சுமார் 2,15,934. வாக்குகள் மட்டுமே பெற்றதோடு சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்த தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி முறைகேடு செய்திருப்பதாகவும், பணபலத்தை இறக்கி வெற்றி பெற்றதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

இந்நிலையில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.