என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்.! முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த வேல்முருகன்
நான் கூறிய எந்த கருத்தையும் என்எல்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் கூட்டத்தில் விவசாயிகளை அழைத்துப் பேசி அடுத்த கட்ட போராட்டத்திற்கு தான் தயாராகி கொண்டிருக்கிறோம். - தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, வடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் திருமண மண்டபத்திற்கு வந்த கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் வாகனத்தை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். அனைத்துக் கட்சி கூட்டம் என்றால் அனைத்து கட்சியினரையும் கூட்டி இருக்க வேண்டும்.
இதையும் படிங்க..2024 நாடாளுமன்ற தேர்தல்; அதிமுக - பாஜக கூட்டணி உறுதியா? அண்ணாமலை கொடுத்த ஷாக் அப்டேட் !!
நாம் தமிழர். ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சி களை அழைக்கவில்லை. இதனால் நான் வெளிநடப்பு செய்தேன். நான் கூறிய எந்த கருத்தையும் என்எல்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் கூட்டத்தில் விவசாயிகளை அழைத்துப் பேசி அடுத்த கட்ட போராட்டத்திற்கு தான் தயாராகி கொண்டிருக்கிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அழைத்து பேசி ஒரு சுமூகதீர்வு காண வேண்டும்.
இதையும் படிங்க..ஜில்லா முதல்வர்.. மெயின்ரோடு புகழ்.! கண்ட்ரோல் இல்லாதவர்கள் - ஜெயக்குமாருக்கு சவால் விட்ட செந்தில் பாலாஜி!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் என்எல்சி நிர்வாகத்தின் அலுவலகத்திலேயே இந்த மாதிரியான கூட்டங்களை நடத்த வேண்டும். இவ்வாறான கூட்டங்களை தனியார் திருமண மண்டபத்தில் நடத்துவதற்கான அவசியம் ஏன் என்றார். மேலும் பேசிய அவர், இவ்விவகாரத்தில், தமிழக அரசு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளை அமைத்து முத்தரப்பு பேச்ச வார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க..ஒரு நபரின் கையில் ஒட்டுமொத்த திரையரங்குகளா? உதயநிதி ஸ்டாலினை சீண்டிய திருமாவளவன்.. பயங்கர ட்விஸ்ட்!!