திராவிடக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் குடும்பமான மறைந்த திமுக அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகள் தமிழச்சி தங்கப் பாண்டியன் தனது 60 ஆம் கல்யாண விழாவை நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி திருக்கோவிலில் ஹோமம் வளர்த்து, இந்து சடங்கு முறைப்படி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 60 ஆம் கல்யாண விழா நடத்துவது என்றால் முதலில் அனைவரின் நினைவுக்கு வருவது, நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்-அபிராமி அம்மன் திருக்கோவில் தான்.

இந்த கோவிலில் நேற்று ஒரு விஐபி குடும்பத்தின் 60 ஆம் கல்யாண விழா நடைபெற்றது. இது வேறு யாருமல்ல… பகுத்தறிவு பாசறையான திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னோடி குடும்பமான தமிழச்சிக்குத்தான் இந்த விழா நடைபெற்றது.

தமிழச்சிதங்கப்பாண்டியன்என்னும்புனைப்பெயரால்அறியப்படும்சுமதிசிறந்த பெண்கவிஞரும்சமூகஆர்வலரும்ஆவார். தமிழகத்தின்முன்னாள்வணிகவரித்துறைஅமைச்சரானமறைந்த தங்கப்பாண்டியனின் மகள். தமிழக முன்னாள் பள்ளிக்கல்விஅமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி. மேலும் அவர் கருணாநிதி மற்றும் கனிமொழியின் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவராக கருதப்படுபவர்.

தமிழச்சி தங்கப்பாண்டியன் சென்னை ராணி மேரிக் கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியையாக பணியாற்றிவிருப்பஓய்வுபெற்றுள்ளார்.தமிழச்சிஎன்னும்சுமதி. இவரது கணவர் சந்திர சேகர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.திமுக ஆட்சிக்காலத்தில் ஜாபர்சேட் உளவுத்துறை அதிகாரியாக இருந்தபோதும், அவருக்குப்பின்பும் உளவுத்துறை அதிகாரியாக சந்திரசேகர் பணியாற்றியுள்ளார். பெரும்பாலும் கோபாலபுரம் மற்றும் சிஐடி காலயினில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில்தான் சந்திரசேகர் பணியாற்றுவார். அவரது தம்பி ராஜேந்திரன் ஐஏஎஸ் வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து தற்போது தலைமைச் செயலகத்தல் செயலாளர் அந்தஸ்த்தில் உள்ள அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர்களது மற்றொரு நெருங்கிய உறவினர் ரவி ஐபிஎஸ் அதிகாரி. இப்படி இந்தக்குடும்பத்தில் உள்ள அனைவரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த சந்திரசேகரைத்தான் தமிழச்சி தங்கப்பாண்டியன் திருமணம் செய்த கொண்டிருக்கிறார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

தமிழச்சி, திமுகவில்தன்னைஇணைத்துக்கொண்டுதற்போதுஅக்கட்சியின் மகளிரணியில்முக்கியபதவிவகித்துவருகிறார். இப்படி திராவிட பாராம்பரியம் மற்றும் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வரும் தமிழச்சி தனது 60 ஆம் கல்யாண நிகழச்சியை திருக்கடையூர் கோவிலில் ஹோமம் வளர்ந்து கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
