தென்சென்னை மக்களவைத் தொகுதியில்  தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட எழுத்தாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்த்தனை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றார்.

தமிழச்சி பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். அது மட்டுமல்லாமல்  மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் தங்கப் பாண்டியனின் மகள். மேலும் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவின் சகோதரி.

இந்நிலையில் தான் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் இருந்து தமிழச்சி எம்.பி.யாக அமோக வெற்றி பெற்றார்.

இதனிடையே தமிழச்சி இன்று அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு. சென்றார். அங்கே அமைந்துள்ள அவரது தந்தை தங்கப்பாண்டியன் நினைவிடம் சென்றார். அவரது தந்தையின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். அப்போது அவரது தாய் மற்றும் சகோதரரும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசுவும் உடனிருந்தனர். 

தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தமிழச்சி தங்கப்பாண்டியனும், அவரது தாயாரும் உணர்ச்சிவயப்பட்டு திடீரென அழுதனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் தங்கம் தென்னரசு ஆறுதல் கூறினார். இந்தச் சம்பவத்தைக் கண்டு அங்கே இருந்த கட்சியினரும் கலங்கினர்.