திமுக ஆட்சி அமைத்தது முதல் அதிமுக-பாஜக அதை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜெயக்குமார் திமுக  தலைவர், முதல்வர் ஸ்டாலினையும் அவரது குடும்பத்தினரையும் குறிவைத்து விமர்சித்து வருகின்றனர். 

தமிழ்நாட்டை விரைவில் கலைஞர் நாடு என்று கூட மாற்றுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுகவில் சாதாரண கொடி கட்டுபவன் கூட முதலமைச்சர் ஆகலாம், ஆனால் திமுகவில் நேரு, பொன்முடி போன்றவர்கள் முதல்வராக முடியுமா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக ஆட்சி அமைத்தது முதல் அதிமுக-பாஜக அதை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜெயக்குமார் திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலினையும் அவரது குடும்பத்தினரையும் குறிவைத்து விமர்சித்து வருகின்றனர். நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக ஜாமீன் மனு பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரி உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் இன்று கையெழுத்திட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- சென்னை ஈசிஆர் சாலைக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் சூட்டுவதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ஆனால் காஷ்மீரில் இருப்பவர்களுக்குக் கூட ஈசிஆர் என்றால் தெரியும், நாடு முழுவதும் புகழ் பெற்ற சாலைதான் ஈசிஆர்.

இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலைக்கு பெயர் மாற்றப்படுவதை பொதுமக்கள் விரும்பமாட்டார்கள். தற்போது அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகத்தை அதிகப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றார். விரைவில் தமிழ்நாட்டை கலைஞர் நாடு என்று கூட மாற்றி விடுவார்கள் என்றும் அவர் விமர்சித்தார். அதிமுகவில் சாதாரணமாக போஸ்டர் ஓட்டுபவன் கொடி கட்டுபவன் கூட முதலமைச்சராக முடியும், ஆனால் திமுகவில் நேரு, பொன்முடி போன்றவர்கள் ஸ்டாலினுக்கு அடுத்து வர முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், திமுகவில் இதுதான் நிலைமை திமுகவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வலிய முன்னிலைப் படுத்தப் படுகிறார். முதல்வரின் மருமகன் சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நிழல் முதல்வராக செயல்படுகிறார்கள்.

இந்நிலையில் கனிமொழிக்கு எந்த வேலையும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் மகுடத்தை உதயநிதி ஸ்டாலினுக்கு சூட்ட வேண்டுமென முதல்வர் நினைக்கிறார். இப்படி திமுகவில் வெறும் வாரிசு அரசியல் தான் நடந்து கொண்டிருக்கிறது என ஜெயக்குமார் திமுகவை கடுமையாக விமர்சித்தார். தற்போதைய நிலையில் பள்ளிக்கூடங்களில் மாணவ மாணவியர் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது. அது மிகுந்த வேதனை அளிக்கிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே எடுபடும் என்றும், இந்தியை பயன்படுத்துவது துரோகம் என்றும் இந்த விழாவில் திமுக இரட்டைவேடம் போடுகிறது என்றும் அவர் விமர்சித்தார்.