Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் ஆணையத்தையே நடுங்க வைக்கும் தமிழகம்.. பணம் வாரி இறைக்கப்படும் என்பதால் தீவிரமாக கண்காணிக்க முடிவு.

கொரோனா காலம் என்பதால் வாக்குப்பதிவு நேரம் ஐந்து மாநிலங்களிலும் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக 5 பேர் மட்டுமே தேர்தல் பரப்புரையில் ஈடுபட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் தபால் வாக்கு செலுத்தலாம், 

Tamil Nadu, which makes the Election Commission tremble, has decided to keep a close watch as money is being pumped out.
Author
Chennai, First Published Feb 26, 2021, 6:23 PM IST

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். மே 2-ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும், தமிழகம், புதுச்சேரி, கேரளாவுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மார்ச் 12ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும், மார்ச் 19-ம் தேதி மனு தாக்கல் நிறைவடைகிறது.  மார்ச் 20ஆம் தேதி வேட்புமனு மனு பரிசீலனை,  மார்ச் 22 வேட்புமனுவை திரும்பப் பெறுதல், என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலகியதை தொடர்ந்து அங்கு சட்டசபை காலியாக உள்ளது. இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. 

Tamil Nadu, which makes the Election Commission tremble, has decided to keep a close watch as money is being pumped out.

5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஐந்து மாநிலங்களிலும் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். இந்நிலையில் மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும்  தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.  

முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர் விரிவாக பேசியதாவது: கொரோனா காலம் கருதி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் தேர்தல் நடக்க உள்ளது. கொரோனா இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்சனைகளை சமாளித்து வருகிறோம். தேர்தல் சிறப்பாக நடைபெற சுகாதாரத்துறை மற்றும் தேர்தல் அதிகாரிக்கு பெரும் பங்கு உண்டு. தற்போது முதல் உடனடியாக  தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. 

Tamil Nadu, which makes the Election Commission tremble, has decided to keep a close watch as money is being pumped out.

கொரோனா காலத்திலும் பீகார் சட்டமன்ற தேர்தலை நடத்தியது மிக சவாலாக இருந்தது. தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டது, தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிகிறது, தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில் 44 எஸ்.சி தொகுதிகளாகவும், 2 எஸ்டி தொகுதிகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 5 மாநிலங்களில் மொத்தம் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரி  30, கேரளா 140,  மேற்குவங்கம் 294, அசாம் 126 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 88.936 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் 1 கோடியே ஒரு லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 34. 73 சதவீத அதிக வாக்கு பதிவு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் தரைத்தளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

Tamil Nadu, which makes the Election Commission tremble, has decided to keep a close watch as money is being pumped out.

கொரோனா காலம் என்பதால் வாக்குப்பதிவு நேரம் ஐந்து மாநிலங்களிலும் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக 5 பேர் மட்டுமே தேர்தல் பரப்புரையில் ஈடுபட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் தபால் வாக்கு செலுத்தலாம், தபால் வாக்கு என்பது கட்டாயமில்லை. வாக்குப்பதிவு மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்,  வேட்புமனுத் தாக்கலுக்கு இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி, பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை இராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர்.வேட்புமனுத் தாக்கலுக்கு அதிகபட்சம் இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். 

அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்படும். வாக்குப்பதிவு மையங்களில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.  தமிழகத்தில் அதிக தேர்தல் செலவு நடைபெறும் என்பதால் முக்கியமாக கண்காணிக்கப்பட உள்ளது. விழாக்கள், பண்டிகைகள், தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பார்வையாளர்கள் தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு மையங்களில் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.  குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் அதுபற்றி  விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios