நாட்டிலே தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் முன்னேறியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலே தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் முன்னேறியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தற்போது வைரஸ் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. ஆனால், தமிழ்நாடு, கேரளா ஒரு சில மாநிலங்களில் கொரோனா பரவல் என்பது தற்போது கட்டுக்கடங்காமல் அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் 33,059 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் மட்டும் 74 பாதிப்புகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் 6வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக 3 லட்சத்திற்கு கீழான தினசரி கொரோனா பாதிப்பு மட்டுமே நாட்டில் பதிவாகியுள்ளது. கொரோனா நேர்மறை சதவீதம் 13,31ஆக உள்ளது.
