தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன்;- அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை புதிதாக 13,84,000 பேர் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். செப்டம்பர் இறுதி வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். கடந்த ஆண்டை விட அதிக மாணவ- மாணவிகள் சேர்ந்து உள்ளனர் என்றார்.

மேலும், பேசிய அவர் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அரசின் கொள்கை முடிவு. நாளை 238 மையத்தில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதனை 1,17,990 பேர் எழுதுகிறார்கள். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்துள்ளது. 

அமைச்சகர் செங்கோட்டையனிடம் வருகிற 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என செ்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் போது, தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது. இது குறித்து எந்த தகவலும் வரவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். வந்தால் தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.