அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் அதிமுகவில் குஸ்தி ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு செல்லூர் ராஜூ சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிரந்தர முதல்வர் எடப்பாடி என்று கூறியிருந்தனர். அதேபோல், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் ஜெயக்குமார் என ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளைக் கூறி வருகின்றனர்.  

இந்நிலையில், அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ் என்றும், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ் என்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.