முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட தமிழக அமைச்சர் பட்டாளமே லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா இந்தோனிசியா என வெளிநாடுகளுக்கு கூண்டோடு பயணம் மேற்கொண்டுள்ளனர். இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆட்சி இதோ களையப்போகிறது, அதோ களையப்போகிறது என்று சொல்லிவந்த நிலையில்,  பல சறுக்கல்களையும் சவால்களை சமாளித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு வெற்றி நடை போட்டுவருகிறது. வலுவான எதிர்கட்சியாக திமுக இருந்த போதிலும் அதிமுக ஆட்சியை அசைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என்று சொல்லும் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிதானத்தை கடைபிடித்து மிக நேர்த்தியாக ஆட்சி நடத்திவருகிறார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிமுக தொண்டர்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் ஆட்சியில் இருக்கும்போதே தம் பெயர் நிலைக்கும்படி தமிழகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் லண்டன் சென்றுள்ள அவர் தமிழகத்திற்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களுக்கு அங்கு ஒப்புதல் அளித்துவருகிறார். இது  தமிழக மக்களிடம் ஒருவகையில்  வரவேற்பை பெற்றாலும் மற்றொருபுறம் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ள அதேநேரத்தில் பாதிக்கு மேற்பட்ட அமைச்சர்கள் தங்களின் துறைசார்ந்த திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வெளிநாடுகளுக்கு பறந்துள்ளனர்.இது தமிழக அரசு மீது பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. அதாவது  முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அவர்களும் லண்டனில் இருந்து வருகின்றனர்.  

இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும், தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் அமெரிக்காவிற்கு சென்று ஆய்வில் இருந்து வருகின்றனர்.  

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  பின்லாந்து நாட்டிற்கும், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சினிவாசன்  இந்தோனேசியா நாட்டிற்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  

கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சரை தொடர்ந்து ஒட்டுமொத்த அமைச்சர் பட்டாளமும் வெளிநாட்க்கு டூர் அடித்திருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.