Asianet News TamilAsianet News Tamil

போதைப் பொருட்களின் புழக்கத்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - அன்புமணி ஆவேசம்

தமிழகத்தில் தற்போது கஞ்சா. மது மற்றும் போதை பொருட்களால் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக கெட்டுவிட்டது. இதன் காரணமாகவே பாலியல் மற்றும் கொலைகள் நடைபெறுவதாக  அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.

tamil nadu law and order is very dangerous stage says anbumani ramadoss
Author
First Published Apr 27, 2023, 7:02 PM IST | Last Updated Apr 27, 2023, 7:02 PM IST

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறார். இதில் நேற்று சின்னாளபட்டியில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிட்டது. 

இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகம் முழுவதும் மது விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என கூறி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட மணல் மாபியா கும்பல் கிராம நிர்வாக அதிகாரியை பட்டப்பகலில் வெட்டி கொலை செய்தனர். அதேபோல் தற்போது தமிழகம் முழுவதும் கொலைகள் நடப்பதும், பாலியல் அத்துமீறல் நடப்பதும் சிறுவர் பாலியல் நடப்பதும் அனைத்தும் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பவர்களுக்கு எதிராக காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பது கிடையாது. 

தமிழ்நாட்டிலேயெ மிகப்பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் மைதானம் தான் - அன்புமணி பேச்சு

பெயரளவிற்கு ஒரு சிலரை கைது செய்து விட்டு அதுவும் கடைக்கோடியில் விற்பனை செய்யும் நபரை கைது செய்கின்றனர். கஞ்சா விற்பனையில் முக்கிய நபர்களை கைது செய்யவில்லை. கஞ்சா மட்டும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கஞ்சா விற்பனை உச்சத்திற்கு வந்துள்ளது. கஞ்சா வேறு வகை விற்பனையில் வந்துள்ளது. கஞ்சா எண்ணெய், கஞ்சா பவுடர், கஞ்சா ஸ்டாம்ப் போன்றவை வந்துள்ளது. 

வேங்கைவயல் விவகாரம்; மேலும் 10 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு

கஞ்சா சாட்டிலைட், கஞ்சா ஸ்டாம்ப் நாக்கில் தடவினால் மிகப்பெரிய போதை ஏற்படுகிறது. மேலும் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் அதிகம் விற்பனைக்கு வருகிறது. காவல்துறையினர் ஆங்காங்கே ஒரு சிலரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஆனால் யார் மீதும் நடவடிக்கை எடுப்பது கிடையாது. தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டால் 4 ஆயிரம் பேரை கைது செய்வதாக காவல்துறை நாடகமாடுகிறது. இவர்களுக்கு அனைவருக்கும் அரசியல் பின்புலம் உள்ளது. பாலியல் குற்றங்களுக்கு காரணமும் கஞ்சா உள்ளிட்ட மது பொருட்கள் தான். இவைகளை அப்புறப்படுத்தினால் மட்டுமே சட்டம் ஒழுங்கு சீராகும் என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios