Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழகம். மாநிலம் முழுவதும் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதி. பணிகள் தீவீரம்.

பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கிடவும், அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதலாக 12,370 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்க அரசு அறிவுறுத்தலின் பெயரில் பொதுப்பணித் துறையால் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

Tamil Nadu is the guide for India. 12,370 oxygen bed facilities across the state. Tasks Intensity.
Author
Chennai, First Published Apr 27, 2021, 1:10 PM IST

covid-19 இரண்டாம் அலையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் விவரம்: 

covid-19 கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அலை வந்தபோது, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுக்கா அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 138 மருத்துவமனைகளில் ரூபாய் 282. 51 கோடி மதிப்பில் 27,806 படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு,  தனிமைப்படுத்தும் வார்டுகள் மற்றும் இதர சுகாதார வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் பொதுப்பணித் துறையால் அவசரகால பணியாக மேற்கொள்ளப்பட்டது.

Tamil Nadu is the guide for India. 12,370 oxygen bed facilities across the state. Tasks Intensity.

இதில் 21,692 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே இவ்வாண்டு கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ளவும், பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கிடவும், அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதலாக 12,370 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்க அரசு அறிவுறுத்தலின் பெயரில் பொதுப்பணித் துறையால் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு 2,912 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் செய்யப்பட்டது. இத்துடன் கூடுதலாக இவ்வாண்டு 2,895 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைவசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

Tamil Nadu is the guide for India. 12,370 oxygen bed facilities across the state. Tasks Intensity.

சென்னையை பொருத்தவரை கூடுதல் ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 550,  அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500, அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எழும்பூரில்  225, கிங்ஸ் இன்ஸ்டியூட் கிண்டியில் 200 மற்றும் சென்னையில் உள்ள இதர சுற்றுவட்டார 11 மருத்துவமனைகளில் 1420 கூடுதல் ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tamil Nadu is the guide for India. 12,370 oxygen bed facilities across the state. Tasks Intensity.

செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கூடுதலாக 434 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், திருச்சி மாவட்டத்தில் 585, தஞ்சாவூர் மாவட்டத்தில் 583, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 311, மதுரை மாவட்டத்தில் 225 மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் 325 மற்றும் பிற மாவட்டங்களில் கூடுதலாக  7012 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவத் துறையைச் சார்ந்த மருத்துவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆகியோர் நாள்தோறும் கலந்து ஆலோசித்து இரண்டாம் அலையை எதிர்கொள்ள மருத்துவத் துறைக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும், பொதுப்பணித்துறை தீவிரமாகவும், துரிதமாகவும் செய்து வருகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios