தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 10ம் தேதியிலிருந்து வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க தடுமாறிவிடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகள் என்று கூறியே மக்கள் ஊரடங்கை பொருட்படுத்தாமல் வெளியே சுற்றித்திரிந்த நிலையில், நாளை முதல் ஊரடங்கு மிகக்கடுமையாக பின்பற்றப்படவுள்ளது.

அதற்கான புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, 

* இதுவரை பிற்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

* திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு மாவட்டங்களுக்கு வெளியே செல்ல இ பாஸ் கட்டாயம்.’

* வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம்

* ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டவாறு இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு தொடரும்.

* மின் வணிக நிறுவனங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி

* தேநீர் கடைகள் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

* அத்தியாவசிய பொருட்களை அருகில் உள்ள கடைகளில் வாங்க வேண்டும். வெகுதூரம் பயணித்தால் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.