வீட்டிலேயே தொழுகை... பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி கிடையாது... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
ரமலான் நோன்பு காலத்தில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக தமிழக அரசு பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்ரல் 25 அன்று தொடங்க உள்ளது. ஆனால், கொரோனா பீதி காரணமாகப் பள்ளிவாசல்களில் ரமலான் தொழுகை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா பீதியால் வீட்டிலேயே நோன்பு கஞ்சி தயாரித்துக்கொள்ளவும், தொழுகை நடத்திக்கொள்ளவும் இஸ்லாமிய அமைப்புகளுடன் தமிழக அரசு நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரமலான் நோன்பு காலத்தில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக தமிழக அரசு பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்ரல் 25 அன்று தொடங்க உள்ளது. ஆனால், கொரோனா பீதி காரணமாகப் பள்ளிவாசல்களில் ரமலான் தொழுகை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்து. இஸ்லாமிய தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பிறகு தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். “ரமலான் நோன்பு கஞ்சிக்காக 5,450 மெட்ரிக் டன் பச்சரிசி 2,895 பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும். நோன்பு கஞ்சியை பள்ளிவாசல்களில் வழங்க அனுமதி கிடையாது. எனவே பள்ளிவாசல்கள் மூலம் இஸ்லாமியர்களின் வீடுகளுக்கு அரிசி வழங்கப்படும். வீட்டிலேயே நோன்பு கஞ்சி செய்துகொள்ளலாம். மேலும் வீட்டிலேயே தொழுகை நடத்திக்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.