- Home
- Politics
- அதிமுகவில் இணைக்கிறார் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி..! தவெகவில் சேர கேட் போட்ட பிடிஆர் டேப் மேட்டர்..!
அதிமுகவில் இணைக்கிறார் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி..! தவெகவில் சேர கேட் போட்ட பிடிஆர் டேப் மேட்டர்..!
இதனை காரணமாக கூறி தவெகவில் பிரவீன் சக்கரவர்த்தியை இணைக்கக்கூடாது என அருண்ராஜும், ஜான் ஆரோக்கிய சாமியும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜயை, காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், ப்ரவீன் சக்கரவர்த்தி தவெகவில் இணைய முயற்சித்தாகவும், அதற்கு அருண் ராஜ், ஜான் ஆரோக்கிய சாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் -தவெகது கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பிரதிநிதியான பிரவீன் சக்கரவர்த்தி விஜயுடன் சந்திப்பை நடத்தினார். இதற்காக சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டில் ரகசிய சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
அதாவது, 2026 தமிழக சட்டசபை தேர்தல் சீட்டு பங்கீடு தொடர்பாக காங்கிரஸின் ஐவர் குழு, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தற்கு மத்தியில், விஜய்யை, ராகுலுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்தது விவாதங்களை கிளப்பியது. சமீபத்தில் விஜய்யைப் பாராட்டி சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்த பிரவீன் சர்க்கரவர்த்தி, ‘‘விஜய்க்கு தானாக கூட்டம் கூடுகிறது. மற்ற கட்சிகளுக்கு அப்படி கூடுவதில்லை’’ எனவும் பாராட்டி இருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த திமுகவினர், பிரவீன் சக்கரவர்த்தி மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது ராகுல் காந்தியை கோபப்படுத்தியதாகவும், காங்கிரஸ் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட பிரவீன் சக்கரவர்த்தி வாய்ப்பு கேட்டபோது திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு காரணமாக சீட் கிடைக்காமல் போனது. இதனால் திமுக மீது அதிப்தியில் இருந்த பிரவீன் சக்கரவர்த்தி திமுக கூட்டணியை விரும்பாமல் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என விஜயுடன் கூட்டணி குறித்து பேசியுள்ளார் என்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் தலைமை திமுகவுடன் கூட்டணியை தொடர உறுதி முடிவெடுத்தால் பிரவீன் சக்கரவர்த்தி, விஜயை சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் தவெகவில் இணைய முயற்சி மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால், அதனை மறுத்த பிரவீன்சர்க்கரவர்த்தி, ‘‘தவெகவில் இணையும் எந்த எண்ணமும் எனக்கு இல்லை. நான் விஜய்யை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. விஜய்யுடன் இட்லி, தோசை, வடை சாப்பிடக் கூட சந்திப்பு நடந்திருக்கலாம். விஜயை நான் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. விஜய் உடனான சந்திப்பால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை’’ என விளக்கம் அளித்திருந்தார். ஆனால், பிரவீன் சர்க்கரவத்தி திமுக மீதான அதிருப்தி காரணமாக தவெகவில் இணைய முயற்சித்தது உண்மை என்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.
காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிடிக்ஸ் துறைத் தலைவராக இருக்கிறார். ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகரும் கூட. சஷி தரூரின் நெருங்கிய விசுவாசி. அவர் மூலமாகவே ராகுல் காந்திக்கு நெருக்கமானார் பிரவீன் சக்கரவர்த்தி. 2023ம் ஆண்டு பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்தபோது அவர் பேசியதாகக் கூறப்படும் 26 வினாடி ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. ஆடியோவில், முதல்வர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள், சபரீச தொடர்பான பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக இதை "திமுக ஃபைல்ஸ்’ எனக்கூறி இந்த ஆடியோவை வெளியிட்டது. இந்த ஆடியோவை பதிவு செய்ததே பிரவீன் சக்கரவர்த்திதான் என்கிறார்கள்.
அவர் பிடிஆர் பேசிக்கொண்டு இருந்தபோது பதிவு செய்யப்பட்ட ஆடியோ எனக்கூறப்படுகிறது. பிடிஆருக்கு தெரியாமல் மொபைலில் ஆடியோவாக பதிவு செய்து பிரவீன் சர்க்கரவர்த்தி வெளியிட்டுவிட்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டது.
இதனை காரணமாக கூறி தவெகவில் பிரவீன் சக்கரவர்த்தியை இணைக்கக்கூடாது என அருண்ராஜும், ஜான் ஆரோக்கிய சாமியும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் தவெகவில் இணைய எடுத்த முயற்சிகள் வீணாகி விட்டது. அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என திமுக ராகுல் காந்திக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆகையால் அங்கும் சிக்கல் ஏற்படவே அடுத்த ஆப்சனாக பிரவீன் சக்கரவர்த்தி அதிமுகவில் இணைய முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
