அணை பராமரிப்பில் அதிமுக அரசு அக்கறை இன்றி இருப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி முக்கொம்பு அணையின் 9 மதகுகள் உடைந்து பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. முக்கொம்பு மேலணை மதகுகள் ஒவ்வொன்றாக உடைத்து கொண்டு வருகிறது என ஸ்டாலின் கூறியுள்ளார். அணையின் பாதுகாப்பை முன்கூட்டியே ஆய்வு செய்து கணிக்க தவறியது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கொள்ளிடம் பாலத்தின் தூண்களை சீரமைக்க தவறியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அணைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு தமிழக அரசே முழுபொறுப்பு என ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பையும் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அணைகளில் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தலைமை பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைக்க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மேலும் தமிழக சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வை அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் முடிவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 20 சதவீதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களை வெகுவாக பாதிக்கும் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.