Asianet News TamilAsianet News Tamil

தமிழக மீனவர்கள் படகை இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடிப்பு.? 4 மீனவர்கள் மாயம். எப்போது ஓயும் இந்த கொடுமை.

அதிலிருந்த மீனவர்கள் அலறிய சத்தம் மற்றொரு படகில் இருந்த மீனவர்களுக்கு கேட்டது. சிறிது நேரத்தில் எந்த சத்தமும் வரவில்லை சக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த மீனவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. 

Tamil Nadu fishermen's boat attacked and sank by the Sri Lankan Navy? 4 Fishermen magic. Seizure of fishing families.
Author
Chennai, First Published Jan 20, 2021, 11:55 AM IST

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலை அடுத்த கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் (18.01.2021) 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில்  1. மெசியா (30), த/பெ  அந்தோணி ராஜ், தங்கச்சிமடம், 2. நாகராஜ் (52), த/பெ  வெள்ளைச்சாமி, வட்டவளம் , உச்சிப்புளி, 3. சாம் (28), த/பெ  நேச பெருமாள், மண்டபம்,  4. செந்தில்குமார் (32), த/பெ  செல்வம், உச்சிப்புளி, ராமேஸ்வரம் ஆகிய நான்கு மீனவர்கள் சென்றனர். 

Tamil Nadu fishermen's boat attacked and sank by the Sri Lankan Navy? 4 Fishermen magic. Seizure of fishing families.

பாக்ஜலசந்தி கடற்பகுதியில் நெடுத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு 2 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர். மீனவர்படகுமீது முட்டி மோதியதில் படகு சேதமடைந்து மூழ்கத் தொடங்கியது. அதிலிருந்த மீனவர்கள் அலறிய சத்தம் மற்றொரு படகில் இருந்த மீனவர்களுக்கு கேட்டது. சிறிது நேரத்தில் எந்த சத்தமும் வரவில்லை சக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில் அந்த மீனவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. நேற்று 19.01.21 காலை 10.30 மணிக்குக் கரை திரும்ப வேண்டியவர்கள், இதுவரை கரைக்கு வந்து சேரவில்லை. 

Tamil Nadu fishermen's boat attacked and sank by the Sri Lankan Navy? 4 Fishermen magic. Seizure of fishing families.

அந்த விசைப்படகைத்தேடி மூன்று விசைப்படகுகளில் 12 மீனவர்கள் சென்றும் கண்டுபிடிக்கமுடியாத நிலையில். இதுவரை அவர்கள்  குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீனவர் குடும்பங்கள் வேதனையில் தவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து இலங்கைக்கற்படையினர் கூறுகையில்: மீனவர்களை நாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்றும், எல்லைதாண்டி மீன்பிடித்த அந்தப்பபடகை  நாங்கள் பிடிக்க முற்பட்டபோது எங்களிடம் பிடிபடாமல் அந்தப்படகு தப்பிச்செல்லுகையில்  எங்கள் இரு கப்பல்கள் மீது மோதி சேதப்படுத்திவிட்டு இந்திய கடற்பகுதிக்குள் விரைந்து சென்றுவிட்டன எனவும்,  படகு சேதமடைந்துள்ளதால் நீண்டதூரம் செல்லமுடியாமல் படகு மூழ்கும் அபாயத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

Tamil Nadu fishermen's boat attacked and sank by the Sri Lankan Navy? 4 Fishermen magic. Seizure of fishing families.

மேலும் இலங்கைக் கடற்படை ரோந்துக்கப்பல்கள் நீர்மூழ்கி வீரர்களுடன்  மீனவர்களைத்தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்று கூறியுள்ளனர். இருதரப்பிலும் தெளிவான தகவல்கள் இல்லாதநிலையில் காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன என்பதை, இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios