நாடாளுமன்றத்தை மோடி நடத்துகிறாரா? அதானி நடத்துகிறாரா? கே.எஸ்.அழகிரி கேள்வி
நாடாளுமன்றத்தை மோடி நடத்துகிறாரா, அதானி நடத்துகிறாரா தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கேள்வி கேள்வி எழுப்பி உள்ளார்.
அரியலூர் மாவட்டம் சோழமாதேவி கிராமத்தில் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குடந்தை என் இராமலிங்கம் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளித்த பேட்டியில், மோடியை பற்றி விமர்சித்து பேசினால் கூட இந்திய நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதானியை பற்றி பேசினால் வெளியே அனுப்புகிறது. நாடாளுமன்றத்தை மோடி நடத்துகிறாரா? அதானி நடத்துகிறாரா?
காஷ்மீர் என்ற மாநிலம் இந்தியாவோடு இருக்க வேண்டும் என்றால் அந்த காரியத்தை செய்ததுதான் சரி. இன்று நீதிமன்றம் குடியரசு தலைவருக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறதே தவிர. அப்படி ஒரு ஏற்பாட்டை செய்தது தவறு என்று சொல்லவில்லை. மோடி அதை மறைத்து பேசுகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேற்குவங்க பெண் பாராளுமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்தது மிகப்பெரிய ஜனநாயக விரோத செயல். சென்னை மழை வெள்ளத்தை நாம் அறிவியல் பூர்வமாக சிந்தித்து பார்க்க வேண்டும். இது சாதாரண வெள்ளம் அல்ல. ஒரு மிகப்பெரிய புயல் சென்னையை மையமாக கொண்டு 17 மணி நேரம் நகராமல் இருந்ததே இதற்கு காரணம். 17 மணி நேரம் மழை பெய்தால் இந்தியாவில் எந்த மாநிலமும் தாங்காது. மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளை திமுக அரசு சிறப்பாக செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.