Asianet News TamilAsianet News Tamil

தமிழக பாஜக புதிய தலைவர் முருகனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து..!!

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1ந்தேதியில் இருந்து அந்த பதவி காலியாக இருந்தது.பாஜக தலைவர் அவரா..? இவரா...? என்று பலருடைய பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் இன்று சைலன்டாக அறிவிக்கப்பட்ட பெயர் தான் முருகன்.

Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy congratulates Murugan
Author
Tamilnádu, First Published Mar 11, 2020, 11:36 PM IST

T.Balamurukan

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1ந்தேதியில் இருந்து அந்த பதவி காலியாக இருந்தது.பாஜக தலைவர் அவரா..? இவரா...? என்று பலருடைய பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் இன்று சைலன்டாக அறிவிக்கப்பட்ட பெயர் தான் முருகன்.

Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy congratulates Murugan

 தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக எல். முருகன் நியமனம் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பினை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டார்.  இதுபற்றி எல். முருகன் கூறும்பொழுது, தன் மீது பா.ஜ.க. தலைமை வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன், தமிழகத்தில் பாஜக முழுவீச்சில் இறங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy congratulates Murugan

கடந்த 15 வருடங்களாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் முருகன். இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார்.  நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. சந்தித்தது.  இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள எல். முருகனுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios