திமுகவில் இருந்து அதிரடியாக விலகிய வி.பி.துரைசாமி தமிழக பாஜக துணை தலைவராக நியமனம் செய்யப்படுவதாக எல்.முருகன் அறிவித்துள்ளார். 

திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். இதனையடுத்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமியை நீக்கப்பட்டு அந்த பதவிக்கு அந்தியூர் செல்வராஜை நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.பி.துரைசாமி எல்.முருகனை சந்தித்து பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில், 3 ஆண்டுகள் ஆனதால் தமிழக பாஜக நிர்வாகிகளை எல்.முருகன் மாற்றம் செய்துள்ளார். அண்மையில் திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக பாஜக துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசன், சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், முருகானந்தம், ஆகியோரும் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன், கரு.நாகராஜன், செல்வக்குமார், சீனிவாசன் ஆகியோர் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.